- Advertisement 3-
Homeவிளையாட்டுராகுல் அவுட்டானதும் பென் ஸ்டோக்ஸ் பார்த்த வேலை.. இந்திய வீரரையே கடுப்பாக்கிய சம்பவம்..

ராகுல் அவுட்டானதும் பென் ஸ்டோக்ஸ் பார்த்த வேலை.. இந்திய வீரரையே கடுப்பாக்கிய சம்பவம்..

- Advertisement 1-

டெஸ்ட் போட்டிகளில் அதிரடி ஆட்டம் தான் ஆடுவோம் என வீம்பாக சுற்றிக் கொண்டிருந்த இங்கிலாந்து அணியை சொந்த ஊருக்கு அழைத்து வந்து பாடம் புகட்டி உள்ளது இந்திய கிரிக்கெட் அணி. முதல் நாளிலேயே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஆட்டம் கண்ட இங்கிலாந்து அணி, 246 ரன்களில் ஆல் அவுட்டானது. அந்த அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மட்டும் 70 ரன்கள் அடித்திருந்தார். மற்ற எந்த வீரர்களும் 40 ரன்களைக் கூட தாண்டவில்லை.

இதனைத் தொடர்ந்து தங்களின் முதல் இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி தான் உண்மையில் சொல்ல போனால், அதிரடியாக ஆடி ரன் சேர்த்திருந்தது. தொடக்க வீரர் ஜெய்ஸ்வால், 80 ரன்கள் எடுத்து அவுட்டானார். அவர் அவுட்டான பின்னர் இந்திய அணி வீரர்கள் நிதானமாக ஆடி ரன் சேர்த்திருந்தனர். இதில் ராகுல் 86 ரன்கள் எடுத்து அவுட்டாக, ஷ்ரேயஸ் ஐயர் 35 ரன்களும், பரத் 41 ரன்களும் எடுத்திருந்தனர்.

இதில் கே எல் ராகுல் மற்றும் ஜெய்ஸ்வால் ஆகிய இருவருமே பெரிய ஷாட் அடிக்க பார்த்த போது தான் அவுட்டாகி சதமடிக்க முடியாமல் அதிருப்தி அடைந்திருந்தனர். முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டு நாள் ஆட்டம் முடிவுக்கு வந்துள்ள சூழலில், இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 421 ரன்கள் சேர்த்துள்ளது.

இதில் ரவீந்திர ஜடேஜா 81 ரன்களுடன் அவுட்டாகாமல் களத்தில் உள்ளார். ஜெய்ஸ்வால் மற்றும் ராகுல் ஆகியோர் தவறவிட்ட சதத்தை நிச்சயம் ஜடேஜா எட்டிப்பிடிப்பார் என்றும் தெரிகிறது. இவருடன் இணைந்து சிறப்பாக ஆடி வரும் அக்சர் படேல், 35 ரன்கள் எடுத்துள்ளார்.

- Advertisement 2-

ஒரு பக்கம் இன்னும் மூன்று நாட்கள் ஆட்டம் மீதமிருக்க, இன்னொரு பக்கம் 175 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி விளங்கி வருகிறது. இதனால், இந்திய அணிக்கே வெற்றி வாய்ப்பு இருப்பதாகவும் தெரிகிறது. மூன்று அல்லது நான்காவது நாளிலேயே இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் போட்டியை முடிவுக்கு கொண்டு வந்து விடுவார்கள் என்ற நம்பிக்கையிலும் ரசிகர்கள் உள்ளனர்.

இந்த நிலையில், கே எல் ராகுல் அவுட்டானதும் மைதானத்தில் நடந்த சம்பவம் தொடர்பான விஷயம், தற்போது கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை பெற்று வருகிறது. 86 ரன்கள் வரை நிதானமாக ஆடி ரன் சேர்த்துக் கொண்டிருந்த ராகுல், டாம் ஹார்ட்லி பந்தை பெரிய ஷாட்டாக மாற்ற முயற்சித்தார். ஆனால், துரதிஷ்டவசமாக அவர் அடித்த பந்து பவுண்டரி லைன் அருகே நின்ற ரெஹான் அகமது கையில் கேட்சாக மாறி இருந்தது.

இதனால் விரக்தி அடைந்த ராகுல் கோபத்தில் பேட்டை அடித்தார். இன்னொரு பக்கம், இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்து மேலே உயர்ந்ததும் முழங்காலிட்ட படி, தனது வாயை பொத்திக் கொண்டு இருந்தார். இதனை ரெஹான் அவுட்டாக மாற்றியதும் மகிழ்ச்சியில் திளைத்த ஸ்டோக்ஸ், கையை நீக்கி விட்டு ராகுலின் விக்கெட்டையும் கொண்டாடி இருந்தார்.

சற்று முன்