ஆசிய கோப்பை வீரருக்கு காயம்… ஓர் இரு போட்டிகளில் விளையாட முடியாமல் போகலாம்.. அஜித் அகர்கர் அதிரடி அறிவிப்பு

- Advertisement -

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் ஆகஸ்ட் 30-ஆம் தேதி பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் தொடங்க உள்ளது. இந்த தொடரில் பங்கேற்க உள்ள 17 பேர் கொண்ட இந்திய அணியை பி.சி.சி.ஐ நேற்று அறிவித்துள்ளது. நீண்ட இடைவேளைக்கு பிறகு நட்சத்திர வீரரான கே.எல். ராகுல் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் அணியில் மீண்டும் இடம்பெற்றுள்ளனர்.

இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் போது கே.எல். ராகுலுக்கு காயம் ஏற்பட்டது. பெங்களூர் அணிக்கு எதிரான ஆட்டத்தின் போது கே.எல். ராகுல் பீல்டிங் மேற்கொண்டார். அப்போது எதிர்பாராத விதமாக அவரது தொடையில் காயம் ஏற்பட்டது. அதன் பின்னர் அவர் எந்த ஒரு போட்டியிலும் பங்கு கொள்ளவில்லை. அதன் பிறகு லக்னோ அணியின் கேப்டனாக க்ருணால் பாண்டியா பொறுப்பேற்றுக்கொண்டார்.

- Advertisement -

கே.எல். ராகுலின் காயம் விரைவாக குணமடைய அறுவை சிகிச்சை செய்ய அறிவுறுத்தப்பட்டது. இதனிடையே அவருக்கு அறுவை சிகிச்சை லண்டனில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. இந்த கால கட்டத்தில் அவர் எந்த ஒரு போட்டியிலும் பங்கேற்கவில்லை. அதில் உலக கோப்பை டெஸ்ட் இறுதி ஆட்டமும் அடங்கும்.

இந்த நிலையில் , மிகுந்த இடைவெளிக்கு பிறகு கே.எல். ராகுல் ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார். கடந்த சில மாதங்களாக அவர் தனது முழு உடல் தகுதியை எட்ட பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமியில் தீவிர பயிற்சிகளை மேற்கொண்டு நல்ல நிலைக்கு திரும்பினார். இந்த நிலையில் அவருக்கு மீண்டும் காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

- Advertisement -

செய்தியாளர் சந்திப்பில் இது குறித்து பேசிய அஜித் அகர்கர் , கே.எல். ராகுல் உடல்நிலையில் தொய்வு உள்ளது. எனவே ஆசிய கோப்பையில் முதல் ஒன்று அல்லது இரண்டு ஆட்டங்களில் அவர் பங்கேற்பது சற்று கடினம் என கூறினார். மேலும் அவர் கூறியதாவது, இப்போது ஏற்பட்டுள்ள அவரது உடல் பிரச்சனையானது தற்காலிகமானது தான்.

கே.எல். ராகுல் சுலபமாக குணமடைவார். பிசியோக்களின் அறிக்கைக்கு ஏற்ப கே.எல். ராகுலின் பங்கேற்பு குறித்து முடிவெடுக்கப்படும் என அகர்கர் தெரிவித்தார். கே.எல். ராகுல் முழுமையாக குணமடையாத பட்சத்தில் அவருக்கான மாற்று வீரராக சஞ்சு சாம்சன் திகழ்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்