- Advertisement 3-
Homeவிளையாட்டுகே.எல் ராகுலை விட்டுட்டு இலங்கைக்கு கிளம்பிய இந்திய அணி. ஆசிய கோப்பையில் அவர் இருக்கிறாரா இல்லையா?...

கே.எல் ராகுலை விட்டுட்டு இலங்கைக்கு கிளம்பிய இந்திய அணி. ஆசிய கோப்பையில் அவர் இருக்கிறாரா இல்லையா? என்ன ஆனது?

- Advertisement 1-

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேபால், இந்தியா, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய 6 அணிகள் பங்கேற்க உள்ளது. இந்த போட்டிகள் அனைத்தும் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடைபெற உள்ளன. இந்தியா விளையாடும் போட்டிகள் அனைத்தும் பாகிஸ்தானில் நடைபெறாமல் இலங்கையில் மட்டுமே நடைபெற உள்ளது.

ஆசிய கோப்பை போட்டி தொடருக்கு முன்னதாக ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி பெங்களூரில் உள்ள ஆளூர் என்ற இடத்தில் பயிற்சி முகாமில் பங்கு கொண்டு பயிற்சி பெற்று வந்தது. இதில் அனைத்து வீரர்களுக்கும் யோ யோ டெஸ்ட் ஆனது மேற்கொள்ளப்பட்டு அதில் அனைத்து வீரர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் ஷுப்மன் கில் முதலாவதாக வந்ததாக அறியப்படுகிறது.

இந்திய அணியைப் பொறுத்தவரை தனது முதல் ஆட்டத்தை பாகிஸ்தான் அணியுடன் இலங்கையில் உள்ள பல்லேகேலவில் சந்திக்க உள்ளது. வரவிருக்கும் ஆசிய கோப்பையில் இந்திய அணியைப் பொறுத்தவரை மிகுந்த அளவிலான பிரச்சனை ஏதுமில்லை. அப்படி பிரச்சனை ஏதும் இருந்தால் கூட இந்த ஆசிய கோப்பையில் திருத்திக் கொள்வதன் மூலம் அது வரவிருக்கும் உலக கோப்பைக்கு மிகுந்த பயனுள்ளதாக அமையும்.

இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம் ஆசியக் கோப்பைக்கு அறிவித்த வீரர்களில் கே.எல். ராகுல் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோரும் அடங்குவர். இதில் குறிப்பிடும் படியாக ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் கே.எல் ராகுல் மிக நீண்ட இடைவேளைக்குப் பிறகு இந்திய அணியில் மீண்டும் இணைந்துள்ளனர். காயத்தால் இருவரும் சிகிச்சை மேற்கொண்டு மீண்டும் இந்திய அணிக்கு திரும்பி உள்ள நிலையில் கே எல் ராகுலுக்கு மீண்டும் தனது உடல் நிலையில் சிறிது அசௌகரியம் இருந்ததாக இந்திய அணியின் தலைமை தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர் கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.

- Advertisement 2-

அவர் மேலும் கூறியதாவது: மீண்டும் இந்திய அணிக்கு திரும்பியுள்ள கே.எல். ராகுல் சிறிது உடல்நிலை பிரச்சினை உள்ளது. எனவே அவர் ஓரிரு போட்டிகளில் விளையாடுவது சந்தேகம் என அவர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் ஆசியக் கோப்பையில் பங்கேற்க உள்ள இந்திய அணி வீரர்கள் அனைவரும் இன்று 29ஆம் தேதி இலங்கைக்கு புறப்பட்டு சென்றனர். கே.எல். ராகுலை தவிர்த்து அனைத்து வீரர்களும் இலங்கைக்கு புறப்பட்டனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து பிசிசிஐ கூறியதாவது: கே.எல். ராகுல் முழுமையாக குணமடைந்து அணிக்கும் மீண்டும் திரும்பி உள்ளார். எனினும் அவருக்கு சிறிய அசௌகரியம் உள்ளது. எனவே அவர் பிசிசிஐயின் மருத்துவ குழுவின் கண்காணிப்பில் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறார். அவரது உடல்நிலை சிறிது முன்னேற்றம் ஏற்பட்டு முழுமையாக குணமடைந்த பின் அவர் இரண்டாவது அல்லது மூன்றாவது ஆட்டத்தில் பங்கு பெறுவார் என கூறப்பட்டுள்ளது.

சற்று முன்