- Advertisement -

மும்பை மட்டும் அப்படி பண்ணிருந்தா நாங்க தோத்துருப்போம்.. தப்பித்த லக்னோ.. உண்மையை சொன்ன கே எல் ராகுல்…

ஆர்சிபி, மும்பை என பிரபலமான அணிகள் ஐபிஎல் தொடரில் கடுமையாக திணறி வரும் அதே வேளையில் கே எல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மிகச் சிறப்பாக ஆடி வருகிறது. முதல் ஆறு போட்டிகளில் மூன்றில் மட்டுமே வெற்றி பெற்றிருந்த லக்னோ அணி, கடைசியாக ஆடிய நான்கு போட்டிகளில் சென்னை அணியை இரண்டு முறையும், மும்பையை ஒரு முறையும் வீழ்த்தி புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்திற்கும் முன்னேற்றம் கண்டுள்ளது.

அவர்கள் இதுவரை ஆடிய இரண்டு சீசன்களிலுமே ப்ளே ஆப் சுற்றைக் கடந்திருந்த நிலையில், இந்த முறை கோப்பையை வெல்லும் முயற்சிகளில் தீவிரமாக இறங்கி உள்ளதாக தெரிகிறது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக நடந்து முடிந்த போட்டியில் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டிருந்த அவர்கள், 144 ரன்கள் மட்டுமே கொடுத்திருந்தனர்.

- Advertisement -

தொடர்ந்து இலக்கை நோக்கி ஆடிய லக்னோ அணி, கைவசம் விக்கெட்டுகள் இருந்தாலும் ரன் சேர்க்க முடியாமல் தடுமாற்றம் கண்டதால் கடைசி ஓவர் வரை போட்டி செல்லும் நிலை உருவாகி இருந்தது. இருந்தாலும் மும்பையை சிறப்பாக சமாளித்து இந்த போட்டியில் லக்னோ அணி வெற்றி பெற்றுள்ளதால் கேப்டன் கே எல் ராகுலும் மிகுந்த உற்சாகத்தில் இருப்பதாக தெரிகிறது.

இது பற்றி பேசிய ராகுல், “கடைசி ஓவர் வரை போட்டி சென்றிருந்தாலும் எங்கள் மிடில் ஆர்டரில் அனுபவம் வாய்ந்த வீரர்கள் இருந்ததால் அந்த அளவுக்கு பதற்றமில்லை. ஒருவேளை மும்பை அணி 160 ரன்கள் அடித்திருந்தால் நிச்சயமாக மிகுந்த சவாலான போட்டியாக இருந்திருக்கும். பொதுவாக லக்னோவிற்கு எதிராக ஆடவரும் அணிகள் இந்த பிட்ச்சிறகு ஏற்ப தயாராக நேரம் எடுத்துக் கொள்ளும்.

- Advertisement -

இதனால் எங்களது பந்து வீச்சாளர்கள் எதிரணியினர் மீது நெருக்கடியை போட்டு வெற்றியும் எளிதாக இருந்தன. இந்த இரண்டு புள்ளிகள் கிடைப்பது எப்போதுமே மகிழ்ச்சி தரும். காயத்திலிருந்து மீண்டு ஆடத் தொடங்கிய மயங்க் யாதவிற்கு மீண்டும் உடலில் வேதனை ஏற்பட்டது. ஒரே ஒரு பந்து வீசியதும் தனக்கு வேதனை இருப்பதாக என்னிடம் கூறினார்.

இதனால் நாங்களும் ரிஸ்க் எடுக்க வேண்டாம் என்று நினைத்தோம். எங்களுக்கு அவர் தான் முக்கியம். அவரது வேகம் மட்டுமே விஷயம் கிடையாது. இந்த போட்டியில் அவரது 150 பிளஸ் வேகத்தை விட திறனை அதிகமாக வெளிப்படுத்தி இருந்தார். அவர் எந்த அளவுக்கு அதிகமாக ஆடுகிறாரோ அந்த அளவுக்கு எந்த நேரத்தில் எப்படி பந்து வீச வேண்டும் என்பதையும் அவர் கற்றுக் கொள்வார். தற்போது அவர் விரும்புவது போல பந்து வீசலாம்” என ராகுல் கூறினார்.

- Advertisement -

Recent Posts