- Advertisement -
Homeவிளையாட்டுஇந்த சீசன் முழுக்க எங்க பிரச்சனையே அதான்.. அப்புறம் எப்படி பிளே ஆப் போறது.. விரக்தியில்...

இந்த சீசன் முழுக்க எங்க பிரச்சனையே அதான்.. அப்புறம் எப்படி பிளே ஆப் போறது.. விரக்தியில் கே எல் ராகுல்..

- Advertisement-

லக்னோஅணி இதற்கு முன்பாக இரண்டு சீசன்களிலும் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற்றம் கண்டிருந்த நிலையில் இந்த முறை அந்த வாய்ப்பில் மிகப்பெரிய ஒரு கேள்விக்குறி உருவாகியுள்ளது. முதல் எட்டு போட்டிகளில் ஐந்தில் வெற்றி பெற்றிருந்த லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ், கடைசியாக ஆடிய 5 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

அந்த அணில் பல சிறப்பான வீரர்கள் இருந்த போதிலும் சமீபத்திய போட்டிகளில் தடுமாற்றம் கண்டதால் தற்போது பிளே ஆப் வாய்ப்பை இழக்கும் கட்டத்திலும் அவர்கள் உள்ளனர். இதுவரை 13 போட்டிகள் ஆடி முடித்துள்ள லக்னோ அணி, அதில் ஆறு போட்டிகளில் தான் வெற்றி பெற்றுள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக இன்னும் ஒரே ஒரு லீக் போட்டி அவர்களுக்கு மீதம் இருக்கும் நிலையில் அதில் வெற்றி பெற்றால் கூட மற்ற போட்டிகளில் சில அணிகளின் வெற்றிகளும் கூடி அமைந்தால் மட்டும் தான் லக்னோ அணியால் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் 209 ரன்களை நோக்கி பேட்டிங்கை தொடங்கிய லக்னோவில் தொடக்க வீரர்கள் யாருமே ரன் சேர்க்கவில்லை. மிடில் ஆர்டரில் பூரன் 61 ரன்களும், இளம் வீரர் அர்ஷத் கான் 58 ரன்களும் எடுத்த நிலையில் கூட அவர்களால் 19 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவ தான் நேரிட்டது.

கடந்த போட்டியிலும் அதிர்ச்சி தோல்வியடைந்து இருந்த லக்னோவிற்கு இந்த முறை மீண்டும் ஒரு தோல்வி ஏமாற்றமாக அமைந்திருப்பதுடன் மட்டும் இல்லாமல் ப்ளே ஆப் வாய்ப்பிற்கும் சிறிய அளவில் மண்ணள்ளி போட்டுள்ளனர். இந்த தோல்விக்கு பின் விரக்தியில் பேசி இருந்த கே எல் ராகுல், “40 ஓவர்களிலும் பிட்ச் ஒரே போல தான் இருந்தது. ஜேக் ஃப்ரேஷரை நாங்கள் அவுட் செய்ததும் நம்பிக்கை பிறந்தாலும் ஹோப் மற்றும் போரல் நல்ல நோக்கத்துடன் ஆடி ரன் சேர்த்தனர்.

- Advertisement-

நாங்களும் கடைசி ஓவர்களில் நன்றாக செயல்பட்டு மீண்டு வந்தோம். மேலும் இந்த இலக்கும் எட்டிப்பிடிக்கும் வகையில் தான் இருந்தது. ஆனால், இந்த சீசன் முழுக்க பவர் பிளேவில் நிறைய விக்கெட்டுகளை நாங்கள் இழந்தது தான் பெரிய பிரச்சனையாக இருந்தது.

ஸ்டாய்னிஸ் மற்றும் பூரன் இருந்தும் அருமையான தொடக்கத்தை நாங்கள் உருவாக்காமல் போனது தான் இப்படி ஒரு இடத்தில் இந்த சீசனில் நாங்கள் இருக்க காரணம்” என கே எல் ராகுல் கூறினார்.

சற்று முன்