- Advertisement -
Homeவிளையாட்டுமீண்டும் விலகிய கே எல் ராகுல்.. சோகத்திலும் சர்வதேச அரங்கில் இளம் வீரருக்கு நடக்க போகும்...

மீண்டும் விலகிய கே எல் ராகுல்.. சோகத்திலும் சர்வதேச அரங்கில் இளம் வீரருக்கு நடக்க போகும் அதிர்ஷ்டம்..

- Advertisement-

இந்திய அணிக்காக மீதமுள்ள 3 டெஸ்ட் போட்டிகளில் மீண்டும் அணியில் இடம்பிடித்திருந்த கே எல் ராகுல், தற்போது விலகி உள்ளது பற்றி அதிகாரபூர்வ தகவல் வெளியாகி உள்ளது. ஜடேஜா மற்றும் ராகுல் ஆகியோர் காயத்தால் இரண்டாவது டெஸ்டை தவற விட்டிருந்தனர். இவர்கள் பாதிக்கு மேல் உடற்தகுதி பெற்றிருந்த அதே சூழலில், அடுத்த டெஸ்ட் போட்டிகளின் போது அவர்கள் எந்த அளவுக்கு முன்னேறி உள்ளார்களோ அதன் அடிப்படையில் தான் அணியில் தேர்வாவார்கள் என்றும் பிசிசிஐ குறிப்பிட்டிருந்தது.

இதனிடையே, கோலி, ஷ்ரேயாஸ் ஐயர் உள்ளிட்ட வீரர்கள் அடுத்த டெஸ்ட் போட்டிகளில் இடம்பெறாமல் போனதால், இந்திய அணி முழுக்க இளம் வீரர்கள் கூட்டமே நிரம்பி கிடக்கிறது. ரோஹித், பும்ரா, ஜடேஜா போன்ற அனுபவம் வாய்ந்த வீரர்கள் இருக்கும் நிலையில், துருவ் ஜூரேல், கேஎஸ் பரத், ராஜத் படிதார், சர்பராஸ் கான், ஆகாஷ் தீப் என சர்வதேச கிரிக்கெட்டில் அதிக அனுபவம் இல்லாத வீரர்கள் தான் அதிகம் நிரம்பி கிடக்கின்றனர்.

- Advertisement -

இதனிடையே, மற்றொரு இளம் வீரரும் தற்போது இந்திய அணியில் இணைந்துள்ளார். காயத்தில் இருந்து மீண்டு வந்த கே எல் ராகுல், ராஜ்கோட்டில் வரும் 15 ஆம் தேதியன்று நடக்க உள்ள 3 வது டெஸ்டில் ஆடமாட்டார் என அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேலும், இவருக்கு பதிலாக ரஞ்சி தொடரில் கலக்கி வரும் இளம் வீரர் தேவ்தத் படிக்கல், 3 வது டெஸ்ட்டுக்கான இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்த ஒரு போட்டியில் மட்டும் தேவ்தத் தேர்வானாலும், ஏற்கனவே வாய்ப்புக்காக ஏங்கி கிடக்கும் பலருக்கு மத்தியில் அவருக்கான வாய்ப்பு கிடைப்பதும் கஷ்டம் தான். அப்படி ஒரு சூழலில், கே எல் ராகுல் விலகி உள்ளதன் காரணமாக ஒரு இளம் வீரருக்கு இந்திய அணியில் அறிமுகமாகும் வாய்ப்பு கிடைக்க போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

- Advertisement-

முதல் தர போட்டிகளில் தொடர்ந்து தனது சதங்களால் அலங்கரித்து வந்த சர்ப்ராஸ் கானுக்கு இந்திய அணியில் இடம்பிடிக்கும் வாய்ப்பு தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வந்தது. ஒவ்வொரு முறையும் ஒரு தொடருக்கான இந்திய அணி அறிவிக்கும் போது காத்து கிடந்து அது கிடைக்காமல் போகும் போது ஏமாற்றமடைந்தும் வந்தார்.

இருந்தாலும் தொடர்ந்து தனது முத்திரையை ரஞ்சி கோப்பை உள்ளிட்ட முதல் தர போட்டிகளில் பதித்து வந்த சர்ப்ராஸ் கானுக்கு இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம் கிடைத்துள்ளது. தற்போது கோலி, ராகுல் மற்றும் ஷ்ரேயஸ் ஐயர் உள்ளிட்ட வீரர்கள் இல்லாததால், அந்த இடத்தை நிரப்புவதற்காக மற்ற இளம் வீரர்களுக்கு மத்தியில் அதிக திறனுடன் விளங்கும் சர்பராஸ் கானுக்கு நிச்சயம் வாய்ப்பு கிடைக்கும் என்றும் ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.

சற்று முன்