- Advertisement 3-
Homeவிளையாட்டுநானும் சூரியகுமாரும் களத்தில் இதை தான் பேசிக்கொண்டு ஆடினோம்... இது எனக்கு புதுசு இல்ல -...

நானும் சூரியகுமாரும் களத்தில் இதை தான் பேசிக்கொண்டு ஆடினோம்… இது எனக்கு புதுசு இல்ல – வெற்றிக்கு பின் கேஎல் ராகுல் பேச்சு

- Advertisement-

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நேற்று மொஹாலி மைதானத்தில் நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது போட்டியில் அசுத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தி அசத்தியது. இந்த வெற்றியின் மூலம் தற்போது இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது.

அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியின் கேப்டன் கே.எல் ராகுல் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 276 ரன்கள் குவித்தது. பின்னர் 277 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது 48.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 281 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

- Advertisements -

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற வெற்றி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் கே.எல் ராகுல் கூறுகையில் : இது ஒன்றும் எனக்கு முதல் முறை கிடையாது. நான் பலமுறை இந்திய அணிக்காக கேப்டன்சி செய்திருக்கிறேன். இப்படி ஒரு அணியை தலைமை தாங்கி வழி நடத்துவதில் எனக்கு மிகவும் விருப்பம். இன்றைய போட்டி ஆரம்பிக்கும் போது சிறப்பாக இருக்கும் என்று நினைத்தேன்.

கொழும்புவில் இருந்து இங்கு திரும்பி வந்த பின்னர் போட்டி ஆரம்பிக்கும் போது சொர்க்கத்தில் இருப்பது போன்று இருந்தது. ஆனால் அதன் பின்னர் நேரம் செல்ல செல்ல வெப்பம் அதிகரித்தது. அதன் காரணமாக உண்மையிலேயே உடல் ரீதியான சவால்களை எதிர்கொள்ள வேண்டி இருந்தது.

- Advertisement-

இருந்தாலும் நல்ல வேலையாக எங்களது அணியின் வீரர்கள் அனைவரும் பிட்னஸில் கடுமையாக உழைக்கிறார்கள். அதன் காரணமாகவே அவற்றை சமாளித்து களத்தில் சிறப்பாக செயல்பட முடிந்தது. நாங்கள் இந்த போட்டியில் ஐந்து பந்துவீச்சாளர்களுடன் மட்டுமே சென்றதால் அனைவருமே 10 ஓவர் வீச வேண்டிய சூழல் ஏற்பட்டது. அதேபோன்று சுப்மன் கில் ஆட்டம் இழந்து வெளியேறியதும் சற்று சவாலான சூழல் ஏற்படும் என்று நினைத்தோம்.

ஆனால் அதன் பின்னர் நாங்கள் அனைவருமே சிறப்பான பார்ட்னர்ஷிப்பை அமைத்து வெற்றியை நோக்கி சென்றோம். அதிலும் குறிப்பாக நானும் சூரியகுமார் யாதவும் அமைத்த பார்ட்னர்ஷிப் சிறப்பாக இருந்தது. நாங்கள் நல்ல கிரிக்கெட் ஷாட்களை விளையாடுவது குறித்தும், ஸ்ட்ரைக் ரொட்டேட் செய்வது குறித்தும் பேசிக்கொண்டோம். அதேபோன்று அவர்கள் விரிக்கும் வலையில் சிக்காமல் போட்டியை இறுதிவரை கொண்டு சென்று சரியான நேரத்தில் முடிக்க வேண்டும் என்று விரும்பியதாகவும் இறுதியில் நாங்கள் வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி என்றும் கே.எல் ராகுல் கூறியது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்