ஆசியக் கோப்பை குரூப் 4 சுற்றில் இன்று இந்திய அணி இலங்கை அணியோடு மோதியது. இந்த போட்டி மிகவும் விறுவிறுப்பாக சென்றது என்றே கூற வேண்டும். இதில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 50 ஓவர்கள் முழுமையாக ஆடவில்லை. 49.1 ஓவரிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 213 ரன்கள் சேர்த்தது.
இதில் துவக்க வீரரான ரோகித் சர்மா சிறப்பாக ஆடி 48 பந்துகளில் 53 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். மற்றொரு துவக்க வீரரான சுமந்திரன் 25 பந்துகளில் 19 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த கோலி 3 ரன்களில் வெளியேறினார். கே எல் ராகுல் மற்றும் இஷான் கிஷன் ஜோடி மெதுவாக பார்ட்னெர்ஷிப்பை உருவாக்க முயலும்போது அவர்களும் ஆட்டம் இழந்தனர். ஹர்திக் பாண்டியா, ஜடேஜா இப்படி அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்து கொண்டே இருந்தன.
அக்சர் பட்டேல் ஒரு முறை நிதானமாக நின்று ஆட, அவரோடு கடைசியாக வந்த சிராஜ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியானது நிதானமாக ஆடி மெதுவாக ரன்களை உயர்த்திக் கொண்டு வந்தது. இலங்கை பவுலிங்கை பொறுத்தவரை வெல்லாலகே சிறப்பாக பந்து வீசி இந்திய அணியின் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்த நிலையில் அடுத்து பேட்டிங் ஆட வந்த இலங்கை அணி ஆரம்பம் முதலே தடுமாறியது என்றே கூற வேண்டும். துவக்க வீரர்களான நிசங்க மற்றும் கருணாரத்ன சொற்ப ரன்களில் வெளியேற, மெண்டிஸ், சமர விக்ரமா, அசலங்கா இப்படி யாரும் பெரிய அளவில் ரன்களை சேர்க்கவில்லை.
டி சில்வா மட்டும் 41 ரன்கள் சேர்த்தார். அதேபோல் பௌலிங்கில் அசத்திய வெல்லாலகே 42 ரன்கள் சேர்த்தார். இலங்கை அணி 41.3 ஓவரில் அணைத்து விக்கெட்டுகளையும் இழந்து 172 ரன்கள் மட்டுமே அடித்தது. இந்திய பவுலிங் பொறுத்தவரை பும்ரா மற்றும் ஜடேஜா தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். குலதீப் யாதவ் 4 விக்கெட்களை வீழ்த்தினர்.
இந்த போட்டியில், குலதீப் யாதவை எதிர்கொள்ள நினைத்த சதிரா அவ்வப்போது இறங்கி வந்து ஆட முயற்சித்தார். இப்படி இருக்கையில் குலதீப் யாதவ் அவருக்கு பந்தை நேராக வீசிக்கொண்டிருந்தார். இதனை கண்ட கேஎல் ராகுல், குலதீபிடம் சென்று பந்தை வெளியில் வீசும்படி கூறினார். சதிரா மீண்டும் இறங்கி வந்த போது குலதீப்பு, கேஎல் ராகுல் சொன்னபடியே செய்ய பந்து நேராக கேஎல் ராகுல் கைக்கு செல்ல அவர் உடனே ஸ்டெம்பிங் செய்தார். கேஎல் ராகுலின் இந்த செயலை அவரது ரசிகர்கள் தொனியோடு ஒப்பிட்டு சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.