- Advertisement -
Homeவிளையாட்டுகில்லால் நிகழ்த்த முடியாத ஹர்திக் மேஜிக்... ராகுல் தந்திரத்தால் குஜராத் அணி தோற்றது எப்படி..

கில்லால் நிகழ்த்த முடியாத ஹர்திக் மேஜிக்… ராகுல் தந்திரத்தால் குஜராத் அணி தோற்றது எப்படி..

- Advertisement-

ஐபிஎல் தொடரின் 20 வது போட்டியில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதி இருந்த நிலையில், இதன் கடைசி ஓவர் வரை போட்டியும் விறுவிறுப்பாகவே சென்றபடி இருந்தது. இதனைத் தொடர்ந்து, நடைபெற்ற அடுத்த போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் மோதி இருந்தன.

இந்த இரு அணிகளும் கடந்த 2022 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் கால் பதித்திருந்த நிலையில், இதுவரை ஆடிய இரண்டு சீசனிலும், இரண்டு அணிகளும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி உள்ளனர். இதில் குஜராத் டைட்டன்ஸ் இரண்டு முறையும் இறுதி போட்டிக்கு முன்னேறி ஒரு தடவை கோப்பையை கைப்பற்றி இருந்தது. ஆனால், கே எல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி, பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி இருந்தாலும் அவர்களால் ஒரு முறை கூட இறுதி போட்டிக்கு முன்னேற முடியாமல் போனது.

அப்படி ஒரு சூழலில், நடப்பு சீசனில் பூரன் மற்றும் மாயங்க் யாதவ் உள்ளிட்ட பல வீரர்களின் ஃபார்ம் அந்த அணியின் ரசிகர்களுக்கு நம்பிக்கையையும் கொடுத்துள்ளது. அப்படி ஒரு சூழலில், 3 போட்டிகள் ஆடி இரண்டில் வெற்றி கண்டிருந்த லக்னோ அணி, தங்களின் 4 வது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொண்டிருந்தது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணியின் தொடக்க வீரர்களான டி காக் மற்றும் ராகுல் ஆகியோர் முறையே 6 மற்றும் 33 ரன்கள் எடுத்து அவுட்டானார்கள். அது மட்டுமில்லாமல், நிதானமாகவே ரன்னையும் அவர்கள் சேர்த்து வந்த நிலையில், ஒரு கட்டத்தில் ஸ்டாயினிஸ் மற்றும் முந்தைய போட்டிகளில் அதிரடி காட்டிய பூரன் ஆகியோர் நல்ல பங்களிப்பை அளிக்க, 20 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி, 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்திருந்தது.

- Advertisement-

அதிகபட்சமாக ஸ்டாயினிஸ் 58 ரன்கள் எடுத்து அவுட்டானார். தொடர்ந்து இலக்கை நோக்கி ஆடிய குஜராத் அணியில் சுப்மன் கில் 19 ரன்களிலும், கேன் வில்லியம்சன் 1 ரன் எடுத்தும் ஆட்டமிழந்தார். குஜராத் அணிக்காக அனைத்து போட்டிகளிலும் நல்ல பங்களிப்பை அளித்து வந்த சாய் சுதர்சன், இந்த முறை 31 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட்டாக, நடுவே சில முக்கிய விக்கெட்டுகளையும் குஜராத் அணி இழந்து தவித்தது.

அதிலும் நான்கு ஓவர்கள் பந்து வீசி, 11 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தி இருந்தார் க்ருணால் பாண்டியா. இவரை போல யாஷ் தாகூரும் 5 விக்கெட்டுகளை கைப்பற்ற குஜராத் அணியும் 102 ரன்களுக்குள் 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றம் காண, அவர்கள் வெற்றி வாய்ப்பும் மங்கத் தொடங்கியது.

கடைசி 3 ஓவர்களில் குஜராத்தின் வெற்றிக்கு 48 ரன்கள் தேவைப்பட, அவர்கள் 19 வது ஓவரில் ஆல் அவுட்டான நிலையில், 130 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தனர். இதனால், லக்னோ அணி குறைந்த ரன்னை அடித்த போதிலும் 33 ரன்கள் வித்தியாசத்தில் தொடர்ச்சியாக 3 வது வெற்றியையும் ருசித்துள்ளனர்.

குஜராத் அணி வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அதிகம் இருந்தும், சிறப்பாக பவுலிங் ரொட்டேஷன் செய்து லக்னோ அணி வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாகவும் அமைந்திருந்தார் கேப்டன் கே எல் ராகுல்.

சற்று முன்