கேஎல் ராகுல் குறித்து வெளியான சர்ச்சை புகைப்படம். கோவத்தோடு அவருடைய மனைவி போட்ட அதிரடி பதிவு. கப் சிப் ஆன நெட்டிசன்கள்

- Advertisement -

இந்திய அணியின் முன்னணி வீரரான கே.எல் ராகுல் ஐ.பி.எல் தொடரில் லக்னோ அணிக்கு கேப்டனாக செயல்பட்டு வந்தார். இந்நிலையில் இந்த தொடரின் பாதியில் அவருக்கு ஏற்பட்ட காயம் காரணமாக இந்த தொடரில் இருந்தே வெளியேறினார். அதன் பின்னர் தனக்கு ஏற்பட்ட காயத்திற்கான அறுவை சிகிச்சையை மேற்கொள்ள அவர் இங்கிலாந்து சென்றார். அந்த வகையில் அங்கு அவர் அறுவை சிகிச்சையை முடித்துக்கொண்டு ஓய்வு எடுத்து வருகிறார்.

இந்த அறுவை சிகிச்சை காரணமாக அவர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கான இந்திய அணியில் இருந்து வெளியேறினார். அதேபோன்று அவர் மீண்டும் இந்திய அணிக்காக எப்போது திரும்புவார் என்பது குறித்த தெளிவான தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

- Advertisement -

இந்நிலையில் லண்டனில் ஓய்வு எடுத்து வரும் கே.எல் ராகுல் நடன அழகிகள் இருக்கும் ஒரு கிளிப்பு விடுதிக்கு சென்று அங்கு பொழுதினை கழித்தது போன்ற ஒரு வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வந்தது. அதனை கண்ட ரசிகர்கள் இந்திய அணிக்காக விளையாடும் ஒரு மதிப்புமிக்க வீரர் இவ்வாறு நடந்து கொள்ளலாமா? என்று அவரை சாடி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த விவாகரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தற்போது கே.எல் ராகுலின் மனைவி அதியா ஷெட்டி ஒரு கருத்தினை வெளியிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிடகிதாவது : எப்பொழுதுமே இதுபோன்ற விடயங்களில் நான் அமைதி காப்பேன். ஆனால் சில முக்கியமான நேரங்களில் விளக்கமளிக்க வேண்டிய சூழல் நமக்கு ஏற்படும்.

- Advertisement -

ராகுல், நான் மற்றும் என் நண்பர்கள் மற்றவர்களை போல வழக்கமாகவே சில இடங்களுக்கு வெளியில் செல்வதுண்டு. அப்படி இருக்கையில் என்ன, ஏது என்று தெரியாமல் யாரும் பேச வேண்டாம். ஒரு தகவலை பதிவு செய்வதற்கு முன்பு அதில் இருக்கும் உண்மை தன்மையை ஆராய்ந்த பிறகு பதிவிடுங்கள். என அதியா ஷெட்டி கூறி உள்ளார்.

இதையும் படிக்கலாமே: இப்போவே கில்லை கோலி சச்சினோடலாம் ஒப்பிடாதிங்க. உச்சகட்ட பார்ம்ல இருந்த எத்தனையோ பேர் காணாம போயிருக்காங்க. எதுக்கு இப்போவே அவசரப்படறீங்க – கபில்தேவ் கருத்து

அவர் இப்படி கூறியதன் மூலம் கே.எல் ராகுல் குறித்த சர்ச்சை இப்போது ஓய்ந்துள்ளது. அதே சமயம் இது விஷயமாக அவரை இதுவரை ட்ரோல் செய்துவந்த பலரும், அவர் விரைவில் குணமடைந்து விரைந்து இந்திய அணிக்காக விளையாட வர வேண்டும் என்று கூறி வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்