நேபாளம் அணிக்கு எதிரான போட்டியில் கேஎல் ராகுலுக்கு இடம்? யார் வெளியே செல்வார்கள்? பிசிசிஐ வைக்கப்போகும் ட்விஸ்ட்

- Advertisement -

உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி இன்று தேர்வு செய்யப்பட உள்ள நிலையில், நேபாளம் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் கேஎல் ராகுலுக்கு வாய்ப்பு வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் அடுத்த மாதம் தொடங்கவுள்ள நிலையில், ஒரு மாதத்திற்கு முன்பாகவே அனைத்து அணிகளை அறிவிக்க வேண்டும் என்று ஐசிசி கெடு விதித்துள்ளது. இதனால் உலகக்கோப்பைக்கான அணியை அறிவிப்பதற்கு நாளை கடைசி நாளாகும். இந்த நிலையில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா, பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் ஆகியோர் ஆலோசனை நடத்தியுள்ளனர்.

- Advertisement -

இந்த ஆலோசனையில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக களமிறங்கிய பிளேயிங் லெவனை அப்படியே உலகக்கோப்பைக்கு கொண்டு செல்லவும், கூடுதலாக முகமது ஷமி, அக்சர் படேல், சூர்யகுமார் யாதவ் மற்றும் கேஎல் ராகுல் ஆகியோரை சேர்க்கவும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கேஎல் ராகுல் தான் முதல் சாய்ஸ் விக்கெட் கீப்பர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்றைய நாளில் என்சிஏவில் கேஎல் ராகுல் தனது ஃபிட்னஸை நிரூபித்துள்ளார். அதன்பின்னர் இலங்கைக்கு விமானம் ஏறி இந்திய அணி வீரர்களுடன் இணைந்துள்ளார். இதனால் நேபாளம் அணிக்கு எதிரான போட்டியில் கேஎல் ராகுலுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

அதேபோல் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக ஆடிய இஷான் கிஷனை தொடக்க வீரராக மாற்றவும் வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏனென்றால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் விளாசிய 3 அரைசதங்களும் தொடக்க வீரராக அடித்தது தான். இதனால் இடதுகை பேட்ஸ்மேனான இஷான் கிசனை டாப் ஆர்டருக்கு கொண்டு செல்ல ரோகித் சர்மா முடிவெடுக்க வாய்ப்புள்ளது.

சுப்மன் கில் அண்மை காலமாக சீராக ரன் குவிக்க முடியாமல் திணறி வருகிறார். அதுமட்டுமல்லாமல் கேஎல் ராகுலுக்கு பயிற்சி ஆட்டமாக நேபாளம் அணிக்கு எதிரான ஆட்டம் இருக்கும் என்பதாலும், உலகக்கோப்பை அணி அறிவிக்கப்பட உள்ளதாலும் இந்திய அணி நிர்வாகம் கேஎல் ராகுலை நிச்சயம் களமிறக்கும் என்றே பார்க்கப்படுகிறது. அதோடு சுப்மன் கில்லின் மோசமான பார்ம் காரணமாக அவர்கள் வெளியிலில் அமர்த்தப்படவும் வாய்ப்புள்ளது என்றே கூறலாம்.

- Advertisement -

சற்று முன்