- Advertisement 3-
Homeவிளையாட்டுவீம்புக்கு சண்ட போட்டதுல இதுதான் பலன்… கோலி & கம்பீருக்கு எவ்வளவு அபராதம் தெரியுமா?

வீம்புக்கு சண்ட போட்டதுல இதுதான் பலன்… கோலி & கம்பீருக்கு எவ்வளவு அபராதம் தெரியுமா?

- Advertisement-

நேற்றைய ஐபிஎல் போட்டி, இந்த சீசனின் மிகவும் சர்ச்சைக்குரிய போட்டியாக மாறியுள்ளது. மிகவும் லோ ஸ்கோர் மேட்ச்சான நேற்றைய போட்டியில் பெங்களூர் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மந்தமான இந்த போட்டியில் நடந்த நாடகீய தருணங்கள் வீரர்கள் மட்டும் இல்லாமல் இரு அணி ரசிகர்களையும் கொதிநிலையில் வைத்துள்ளது.

இரு அணிகளும் சில வாரங்களுக்கு முன்னர் மோதிய போட்டியில் லக்னோ, கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்றது. அப்போது அந்த அணி வீரர்களின் கொண்டாட்டங்கள் மிகையானதாக இருந்தது. அதிலும் குறிப்பாக அந்த அணியின் ஆலோசகர் கம்பீர், வீரர்களை விட எரிச்சல் அடைய செய்யும் விதமாக நடந்துகொண்டார்.

- Advertisements -

அதனால் நேற்றைய போட்டியில் வெற்றி பெற்ற பெங்களுர் அணி வீரர்களும் அதிகமாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அதிலும் கோலி, சிராஜ் ஆகியோர் முன்னிலையில் இருந்து செயல்பட்டனர். அப்போதே போட்டிக்குள் தீப்பற்றிக் கொண்டது. அந்த தீப்பொறி போட்டிக்குப் பின்னர் எரிமலையாக வெடித்தது.

இந்த போட்டியை விட அதற்குப் பின்னர் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்கள்தான் ரசிகர்களை பரபரப்படையச் செய்தன. போட்டி முடிந்ததும் வீரர்கள் கைகொடுக்கும் இடத்திலேயே கம்பீருக்கும், கோலிக்கும் இடையே ஒரு சீண்டல் நடந்தது. பின்னர் லக்னோ அணி வீரர் கைல் மேயர்ஸ் கோலியிடம் பேசிக் கொண்டிருக்கும் போதே அவரை வந்து கம்பீர் கையைப் பிடித்து அழைத்து சென்றார். கம்பீரின் இந்த செயல் கோலியை வெகுவாகக் கோபப்படுத்தியது.

- Advertisement-

இதையடுத்து இருவரும் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது சம்மந்தமான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகின. ஜெண்டில்மேன்களின் ஆட்டம் என சொல்லப்படும் கிரிக்கெட்டில் இப்படி வீரர்கள் மோதிக் கொண்டதை ஐபிஎல் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. பெங்களூர் அணி வீரர் கோலி மற்றும் லக்னோ அணியின் ஆலோசகர் கம்பீர் ஆகிய இருவருக்கும் போட்டிக்கான ஊதியத்தில் 100 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமில்லாமல் லக்னோ அணியின் வீரர் நவீன் உல் ஹக்குக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சற்று முன்