நீங்க ஒன்னு கொடுத்தா அத திருப்பி வாங்கவும் தயாரா இருக்கனும்… விடாமல் ஊமைக் குத்து குத்தும் கோலி! – வீடியோ

- Advertisement -

ஐபிஎல் 2023 இன் 43 ஆவது போட்டி நடைபெற்றது. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதிய இந்த போட்டி முடிந்ததும் வீரர்கள் கைகொடுக்கும் இடத்திலேயே கம்பீருக்கும், கோலிக்கும் இடையே ஒரு சீண்டல் நடந்தது. பின்னர் லக்னோ அணி வீரர் கைல் மேயர்ஸ் கோலியிடம் பேசிக் கொண்டிருக்கும் போதே அவரை வந்து கம்பீர் கையைப் பிடித்து அழைத்து சென்றார்.

கம்பீரின் இந்த செயலால் கோபமான கோலி, ஏதோ சொல்ல, அது கம்பீரை மேலும் கோபப்படுத்தியது. இதையடுத்து இருவரும் ஆக்ரொஷமாக வாக்குவாதம் செய்து கொண்டனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பிசிசிஐ ஒழுங்கு நடவடிக்கையாக அவர்களுக்கு போட்டி கட்டணம் முழுவதும் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள்ளாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுர் அணி நிர்வாகம் வெளியிட்டுள்ள வீடியோ பிரச்சனையை தீர விடுவதாக இல்லை.

- Advertisement -

ஓய்வறையில் வீரர்கள் வெற்றியைக் கொண்டாடும் தருணத்தைப் பதிவு செய்துள்ள அந்த வீடியோவில் கோலி “நீங்கள் ஒன்றை கொடுத்தால் அதை திருப்பி வாங்கவும் தயாராக இருக்கவேண்டும். இல்லை என்றால் அதை நீங்கள் கொடுக்கக் கூடாது” என மறைமுகமாக லக்னோ அணியினரை சீண்டியுள்ளார்.

மேலும் அந்த வீடியோவில் “இந்த வெற்றி முக்கியமானது. நாங்கள் அடுத்தடுத்து வெளியூர் போட்டிகளில் விளையாட உள்ளோம். அதனால் இந்த வெற்றி முக்கியமானது. எங்களுக்கு இங்கு ஆதரவு அளித்த ரசிகர்களுக்கு நன்றி” எனக் கூறியுள்ளார்.  இந்த வீடியோ இப்போது சமூகவலைதளங்களில் பரவி வைரல் ஆகி வருகிறது.

- Advertisement -

சில வாரங்களுக்கு முன்னர் பெங்களுருவில் நடந்த போட்டியில் வெற்றி பெற்ற போது லக்னோ அணி வீரர்கள் ஆவேஷ் கான், நிக்கோலஸ் பூரன் மற்றும் அணியின் ஆலோசகரான கம்பீர் ஆகியோரின் சைகைகளே பெங்களூர் அணியில் எரிச்சல் அடையச் செய்தது. அதற்கு பதிலாக நேற்றைய வெற்றியின் போது அவர் தங்கள் கொண்டாட்டத்தை ஆக்ரோஷமாக வெளியிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்