ஆசிய கோப்பை குரூப் 4 சுற்றுக்கான கடைசி போட்டியில் தற்போது இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் விளையாடி வருகிறது. இந்திய அணியை பொருத்தவரை ஏற்கனவே பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணியை வென்றதன் மூலம் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டது. ஆனால் பங்களாதேஷ் அணி இறுதிப் போட்டிக்கு செல்ல முடியாத நிலையில் உள்ளது.
இப்படி இருக்கையில் இந்த போட்டி அதிகப்படியான சுவாரசியமாக இருக்காது என்று எண்ணிய நிலையில் அதற்கு நேர் மாறாக இந்த போட்டியில் சுவாரசியம் கூடிக் கொண்டே இருக்கிறது. இரு அணிகளுமே தங்களது ஸ்குவாடில் பல மாற்றங்களை செய்துள்ளது. இந்திய அணியை பொறுத்தவரை நட்சத்திர வீரரான விராட் கோலி, ஆல் ரவுண்டரான ஹர்திக் பாண்டியா, பவுலர் பும்ரா, சிராஜ், குலதீப் யாதவ் போன்றோருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.
அதே சமயம் இவர்களுக்கு பதிலாக முகமது சமி, பிரசித் கிருஷ்ணா, சர்துல் தாக்கூர், திலக் வர்மா சூரியகுமார் யாதவ் ஆகியோருக்கு அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பீல்டிங் செய்ய தீர்மானித்தது. இந்த நிலைகள் முதலில் பேட்டிங் செய்த பங்களாதேஷ் அணி 50 ஓவர்கள் முடிவில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 265 ரன்கள் குவித்தது.
அந்த அணியின் கேப்டனான ஷகிப் அல் ஹசன் 85 பந்துகளில் 80 ரன்கள் குவித்தார். மற்றொரு வீரரான டவ்ஹித் ஹ்ரிடோய் 81 பந்துகளில் 54 ரன்கள் குவித்தார். அதேபோல் நசும் அகமது 45 பந்துகளில் 44 ரன்கள் குவித்தார். இந்திய அணியின் பௌலர்களை பொருத்தவரை ஷர்துல் தாக்கூர் மூன்று விக்கட்டும், முகமது சமி 2 விக்கட்டும் பிரசித் கிருஷ்ணா, அக்சர் பட்டேல் மற்றும் ரவீந்திர ஜடேஜா தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.
இந்திய அணியின் பேட்டிங்கை பொறுத்தவரை மிகவும் சுமார் என்றே கூறவேண்டும். கேப்டன் ரோகித் சர்மா பூஜ்யம் ரன்களில் வெளியேற, அடுத்தடுத்து வந்த வீரர்களும் சொற்ப ரன்களே அடித்து வருகின்றனர். அனால் கில் மட்டும் நிதானமாக ஒரு முனையால் ஆடி வருகிறார். தற்போது வரை அவர் 111 பந்துகளில் 93 ரன்கள் அடித்துள்ளார்.
இந்த போட்டியில் ஓய்வில் உள்ள விராட் கோலி, இந்திய அணி வீரர்களின் தாகம் தணிக்கும் வகையில் அவர்களுக்கு தண்ணீர் கொண்டு வரும் பொறுப்பை ஏற்று அதை சிறப்பாக செய்துள்ளார். அவர் தண்ணீர் கொண்டுவரும் போது குழந்தை போல ஓடிவரும் காட்சி பலரையும் ரசிக்க வைத்துள்ளது.