- Advertisement 3-
Homeவிளையாட்டுSRH-கு எதிரான வெற்றிக்கும் பிறகு கம்பீரையும், நவீன் உல் ஹக்கையும் வச்சி செய்யும் கோலி ரசிகர்கள்....

SRH-கு எதிரான வெற்றிக்கும் பிறகு கம்பீரையும், நவீன் உல் ஹக்கையும் வச்சி செய்யும் கோலி ரசிகர்கள். நார்த்து, சவுத்துனு எல்லா ஏரியாவும் ஒன்னு கூடிட்டாங்கயா.

- Advertisement 1-

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் நட்சத்திர வீரருமான கோலி, கடந்த சில ஆண்டுகளாக சரியான பார்மில் இல்லாமல் போராடி வந்தார். ஆனால் சமீபமாக அவர் சர்வதேசக் கிரிக்கெட் மற்றும் ஐபில் கிரிக்கெட் என இரண்டிலும் தன்னுடைய பார்மை மீட்டு தன்னை ரன்மெஷின் என மீண்டும் நிரூபித்து வருகிறார்.

சேஸிங் கிங் என அழைக்கப்படும் கோலி, நேற்றைய இன்னிங்ஸில் 63 பந்துகளில் சதமடித்து அசத்தினார். அவரின் இந்த சதம் பெங்களூர் அணியை வெற்றி பெறச்செய்து, இப்போது அவர்களின் ப்ளே ஆஃப் வாய்ப்பை பிரகாசமாக்கியுள்ளது. இந்நிலையில் நேற்றிரவு முதல் கோலியின் ரசிகர்கள் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் வீரர் நவீன் உல் ஹக் மற்றும் அந்த அணியின் ஆலோசகர் கவுதம் கம்பீர் ஆகியோரை சமூகவலைதளங்களில் ட்ரோல் செய்து வருகின்றனர்.

கோலி, சில வாரங்களுக்கு முன்னர் நடந்த லக்னோ அணிக்கு எதிரான போட்டியின் வெற்றியின் போது ஆக்ரோஷமாக நடந்துகொண்டார். இதனால் அந்த அணி வீரர் நவீன் உல் ஹக்குக்கும், கோலிக்கும் இடையே மைதானத்தில் காரசாரமான வார்த்தைப் பரிமாற்றம் நடந்தது. அந்த மோதல், போட்டி முடிந்த பின்னரும் தொடர்ந்தது. இந்த மோதலில் லக்னோ அணியின் ஆலோசகர் கம்பீரும் கலந்துகொள்ளவே விரும்பத்தகாத சம்பவமாக இருவரும் ஆக்ரோஷமாக பேசிக் கொண்டனர். இது சம்மந்தமான வீடியோ இணையத்தில் வைரல் ஆனது.

அதைத் தொடர்ந்து லக்னோ அணி தோற்கும் போட்டிகளை கோலி, மறைமுகமாக கொண்டாடுவதும், பெங்களூர் அணி தோற்கும் போட்டிகளின் போது நவீன் உல் ஹக் கோலியை மறைமுகமாக சீண்டுவதும் என சம்பவங்கள் நடந்து வந்தன. இந்நிலையில் தான் நேற்றைய போட்டியில் கோலியின் சாதனை சத இன்னிங்ஸ்க்கு பிறகு நவீன் மற்றும் கம்பீரை ரசிகர்கள் இரக்கமில்லாமல் ட்ரோல் செய்து வருகின்றனர்.

- Advertisement 2-

முன்னதாக கம்பீர் மற்றும் நவீன் ஆகியோர் இருக்கும் இடங்களில் ‘கோலி கோலி’ எனக் கத்தி ரசிகர்கள் அவர்களை சீண்டிய வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆகின என்பது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்