இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 50-வது லீக் போட்டியானது நேற்று டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டெல்லி அணியானது 7 விக்கெட் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தி அசத்தலான வெற்றியை பெற்றது. அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியானது முதலில் பேட்டிங் செய்யும் என்று அறிவித்தது.
அதன்படி முதலில் விளையாடிய பெங்களூரு அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 181 ரன்களை குவித்தனர். பெங்களூரு அணி சார்பாக விராட் கோலி 55 ரன்களையும், லாம்ரோர் 54 ரன்களையும் குவித்து அசத்தினர். பின்னர் 182 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய டெல்லி அணியானது 16.4 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை மட்டும் இழந்து 187 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பெற்றது.
இந்த போட்டியில் டெல்லி அணி சார்பாக சார்பாக பில் சால்ட் 87 ரன்களையும், ரைலி ரூஸோ 35 ரன்கள் குவித்து அசத்தினர். இந்நிலையில் இந்த போட்டியில் பெங்களூரு அணி சார்பாக அரைசதம் கடந்த விராத் கோலி ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் 7000 ரன்களை குவித்த முதல் வீரர் என்ற பெருமையையும் படைத்தார். அதோடு அவர் அடித்த இந்த அரைசதம் இந்த நடப்பு ஐபிஎல் தொடரில் அவர் அடித்த ஆறாவது அரைசதமாகவும் பதிவாகியுள்ளது.
என்னதான் விராட் கோலி இந்த தொடரில் ஆறாவது அரை சதத்தை அடித்து அசத்தி இருந்தாலும் அவரது இந்த அரைசதம் வீணான ஒன்று என்ற கருத்துக்கள் அனைவரது மத்தியிலும் இருந்து வருகின்றன. ஏனெனில் 46 பந்துகளை சந்தித்த விராட் கோலி ஐந்து பவுண்டரிகளுடன் 55 ரன்கள் மட்டுமே குவித்து மெதுவாக விளையாடி இருந்தாலே அந்த அணி தோல்வி அடைந்ததாகவும் பார்க்கப்படுகிறது.
இந்த சீசனில் எப்பொழுதுமே அரைசதம் அடித்தாலும் விராட் கோலி மெதுவாக அடிப்பதால் அவர் அடிக்கும் அரைசதங்கள் வீணானவை என்று ஒரு கருத்து இருந்து வந்தவேளையில் இந்த போட்டியிலும் அவர் பொறுமையாக அதைசதம் அடித்தது வீணான ஒன்று என விமர்சனங்கள் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.