காலைத் தூக்கி ஷுவைக் காட்டிய கோலி… இதுதான் பிரச்சனைக்கு ஆரம்பப் புள்ளியா?- பின்னணி என்ன?

- Advertisement -

இந்த சீசனின் ஐபிஎல் போட்டிகளில் நேற்று நடந்த போட்டிதான் மிகவும் சர்ச்சைக்குரிய போட்டியாக அமையும். போட்டி முடிந்து 12 மணிநேரத்துக்கு மேலாகியும் இன்னும் ரசிகர்கள் மத்தியில் அமைதி எழவில்லை. இந்நிலையில் நேற்றைய அத்தனைக் கலவரங்களுக்கும் ஒரு சின்ன தருணம்தான் காரணமாக அமைந்துள்ளது என ரசிகர்கள் பலர் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த தருணம் எது?

சில வாரங்களுக்கு முன்னர் பெங்களுருவில் நடந்த போட்டியில் வெற்றி பெற்ற போது லக்னோ அணி வீரர்கள் ஆவேஷ் கான், நிக்கோலஸ் பூரன் மற்றும் அணியின் ஆலோசகரான கம்பீர் ஆகியோரின் சைகைகளே பெங்களூர் அணியில் எரிச்சல் அடையச் செய்தது. அதற்கு பதிலாக நேற்றைய வெற்றியின் போது அவர் தங்கள் கொண்டாட்டத்தை ஆக்ரோஷமாக வெளியிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்நிலையில் நேற்றைய போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸின் போது ஆர் சி பி வெற்றி வாய்ப்பு அதிகமான போது, கோலி ஒவ்வொரு விக்கெட்டையும் ஆர்ப்பாட்டமாகக் கொண்டாடினார். அவரோடு முகமது சிராஜும் இணைந்து கொண்டார்.

இந்நிலையில் லக்னோ அணி வீரர் நவீன் உல் ஹக் பேட் செய்யும் போது கோலி விக்கெட்டில் நடக்க, அவர் விதிகளை மீறி விக்கெட்டில் நடப்பதாக நவின், நடுவரிடம் புகார் செய்துள்ளார். அதற்காக நடுவர் கோலியிடம் எச்சரிக்கை விடுக்க, தான் விதிகளை மீறவில்லை என்றும் மேலும் ஸ்பைக் ஷூ அணிந்து நடக்கவில்லை என்றும் கோலி, ஷூவை நவீனிடம் காட்டியுள்ளார். இந்த சைகையால் சீண்டப்பட்ட நவீன், போட்டி முடிந்ததும் கோலியிடம் வாக்குவாதம் செய்தார். அதன் பின்னரே மொத்த பிரச்சனையும் வெடிக்க ஆரம்பித்துள்ளது.

- Advertisement -

இந்த பிரச்சனையில் பெரும்பாலான ரசிகர்கள் ஆர் சி பி அணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ஆர் சி பி வெளியிட்டுள்ள வீடியோவில் தன் செயலை நியாயப்படுத்தி பேசியுள்ளார் கோலி. அதில் “நீங்கள் ஒன்றை கொடுத்தால் அதை திருப்பி வாங்கவும் தயாராக இருக்கவேண்டும். இல்லை என்றால் அதை நீங்கள் கொடுக்கக் கூடாது” என குத்தலாக பேசியுள்ளார்.

- Advertisement -

சற்று முன்