Homeகிரிக்கெட்சச்சினோட இந்த சாதனை.. கண்டிப்பா அவரால தொடவே முடியாது.. கோலிக்கு சவால் விட்ட முன்னாள் ஜாம்பவான்?..

சச்சினோட இந்த சாதனை.. கண்டிப்பா அவரால தொடவே முடியாது.. கோலிக்கு சவால் விட்ட முன்னாள் ஜாம்பவான்?..

-Advertisement-

கிரிக்கெட்டில் ஒரு காலத்தில் லெஜண்ட் என அறியப்பட்டவர் டான் பிராட்மேன். அவருக்கு பின் வந்த சச்சின் டெண்டுல்கர், பல கிரிக்கெட் சாதனைகளை முறியடித்தது மட்டுமில்லாமல் தனக்கான புது ரெக்கார்டுகளையும் உருவாக்கி கிரிக்கெட் உலகின் கடவுள் என்றும் வர்ணிக்கப்பட்டு வருகிறார். 16 வயதில் கிரிக்கெட் விளையாட வந்த சச்சின் டெண்டுல்கர், அதன் பிறகு செய்த சம்பவங்கள் அனைத்துமே சாதனைகள் மட்டும் தான்.

அதிக சர்வதேச சதங்கள், அதிக சர்வதேச ரன்கள் என சச்சினின் சாதனையை பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். அப்படி இருக்கையில் சச்சினுக்கு அடுத்த தலைமுறையில் உருவான வீரர் தான் விராட் கோலி. இவர் கிரிக்கெட் ஆட ஆரம்பித்த காலம் முதலே சச்சின் சாதனைகளை முறியடிக்க போவது இவர்தான் என கணித்து வந்தனர். அந்த வகையில் தொடர்ந்து விராட் கோலி சர்வதேச போட்டிகளில் பல்வேறு சாதனைகளை படைத்து வருவதுடன் சச்சினின் முக்கியமான சாதனைகளையும் முறியடித்து வருகிறார்.

-Advertisement-

அந்த வகையில் சமீபத்தில் ஒரு நாள் போட்டியில் அதிக சதங்கள் அடித்த பட்டியலில் முதலிடத்தில் இருந்த சச்சின் டெண்டுல்கரைத் தாண்டி, அவர் முன்னிலையிலேயே ஐம்பதாவது ஒருநாள் போட்டி சதத்தை கோலி அடித்த சம்பவம், கிரிக்கெட் அரங்கில் அரிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. அதே போல, இதுவரை சுமார் 80 சதங்கள் அடித்துள்ள கோலி, சச்சினின் 100 சதங்கள் சாதனையையும் விரைவில் முறியடிப்பார் என பலரும் குறிப்பிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் சச்சினின் 100 சதங்கள் சாதனையை விராட் கோலியால் முறியடிப்பது கடினமான ஒன்று என வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் ஜாம்பவான் பிரைன் லாரா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் பேசுவையில், “80 சதங்கள் அடித்துள்ள கோலிக்கு இன்னும் 20 சதங்கள் தேவைப்படுகிறது. தற்போது 35 வயதாகும் விராட் கோலி, வருடங்களுக்கு 5 சதங்கள் அடித்தால் கூட சச்சின் சாதனையை முறியடிப்பது சற்று கடினமான ஒன்று தான். 20 சதங்கள் அடிப்பதற்கு நீண்ட காலம் தேவைப்படும். பலரும் தங்களின் கிரிக்கெட் பயணத்தில் கூட மொத்தம் 20 சதங்களை அடித்ததில்லை.

-Advertisement-

இதனால் விராட் கோலி கண்டிப்பாக அந்த சாதனையை செய்வார் என்று நான் சொல்ல மாட்டேன். நிறைய சாதனைகளை விராட் கோலி முறியடித்தாலும், நூறு சதங்கள் சாதனையை உடைப்பது சற்று கஷ்டமான ஒன்று தான். ஒருவேளை அவர் 100 சதங்கள் தாண்டி அடித்தாலும் நான் நிச்சயம் அதற்காக சந்தோஷப்படுவேன். அவருக்கு என் வாழ்த்துக்கள். சச்சின் எனது நெருங்கிய நண்பர். ஆனால், நான் விராட் கோலியின் பெரிய ரசிகன்” என பிரைன் லாரா தெரிவித்துள்ளார்.

-Advertisement-

சற்று முன்