- Advertisement -
Homeவிளையாட்டுஅதே சேப்பாக்கம்.. அதே கேகேஆர்.. 12 சீசன்களுக்கு பிறகு.. சிஎஸ்கேவுக்கு பதிலாக காத்திருக்கும் ஆர்சிபி..

அதே சேப்பாக்கம்.. அதே கேகேஆர்.. 12 சீசன்களுக்கு பிறகு.. சிஎஸ்கேவுக்கு பதிலாக காத்திருக்கும் ஆர்சிபி..

- Advertisement-

பல்வேறு எதிர்பார்ப்புக்கு மத்தியில் யார் ஐபிஎல் கோப்பையை கைப்பற்றுவார்கள் என்பதை பற்றி பல்வேறு கணிப்புகள் இருந்த சூழலில் தான் குவாலிபயர் 1 போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதி முடித்துள்ளது. ஒரு பக்கம் கொல்கத்தா அணியில் ஆடும் வீரர்கள் அனைவருமே நல்ல ஃபார்மில் இருக்கும் நிலையில், இன்னொரு பக்கம் ஹைதராபாத் அணி பேட்டிங்கில் பட்டையை கிளப்பி வருகிறது.

இதனால் இந்த இரண்டு அணிகளும் அகமதாபாத் மைதானத்தில் மோதும் போட்டியின் முடிவு என்னவாக இருக்கும் என்பதை அறியும் ஆவலும் ரசிகர்களை தொற்றிக் கொண்டது. அப்படி ஒரு சூழலில் தான் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்திருந்தார்.

பஞ்சாப் அணிக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர் ஹெட், முதல் பந்திலேயே ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்திருந்தார். அதே போல தற்போதும் ஸ்டார்க் வீசிய முதல் ஓவரின் இரண்டாவது பந்திலேயே மீண்டும் ஒரு முறை ரன் எதுவும் எடுக்காமல் அவுட்டானார் ஹெட். அதன் பின்னர் சிறிய இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறி இருந்தது ஹைதராபாத். மற்றொரு தொடக்க வீரரான அபிஷேக் ஷர்மா, 3 ரன்களில் அவுட்டாக, மூன்றாவது வீரராக உள்ளே வந்த ராகுல் திரிபாதி, சிறப்பாக ஆடி தனக்கு கிடைத்த வாய்ப்பையும் கச்சிதமாக பயன்படுத்திக் கொண்டார்.

திரிபாதி 35 பந்துகளில் 55 ரன்கள் எடுத்து துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட்டாக, பின்னர் வந்த எந்த வீரரும் பெரிய அளவில் ரன் சேர்க்கவில்லை. கிளாசன் 21 பந்துகளில் 32 ரன்களும் கடைசி கட்டத்தில் கேப்டன் பேட் கம்மின்ஸ் 24 பந்துகளில் இரண்டு சிக்ஸர்களுடன் 30 ரன்களும் எடுக்க, ஹைதராபாத் அணி 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 159 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.

- Advertisement-

தொடர்ந்து இலக்கை நோக்கி ஆடிய கொல்கத்தா அணியில் பேட்டிங் வந்த அனைத்து வீரர்களும் சிறப்பாக ஆட, மிக எளிதாக இந்த போட்டியில் தங்களின் வெற்றியையும் கொல்கத்தா அணி பதிவு செய்திருந்தது. 13.4 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டி இருந்த கொல்கத்தா அணியில், கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் அதிகபட்சமாக 24 பந்துகளில் 5 ஃபோர்கள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 58 ரன்கள் எடுத்திருந்தார். இவருடன் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்த வெங்கடேஷ் ஐயரும், 28 பந்துகளில் 51 ரன்கள் எடுக்க, கொல்கத்தா அணி மிக எளிதாக வெற்றி பெற்று இறுதி போட்டிக்கும் முன்னேறி உள்ளது.

கடந்த 2012 ஆம் ஆண்டு, சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த இறுதி போட்டியில் முன்னேறி இருந்த கொல்கத்தா அணி, சிஎஸ்கேவை வீழ்த்தி முதல் முறையாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றி இருந்ததும் குறிப்பிடத்தக்கது. இதுவரை 3 முறை ஐபிஎல் இறுதி போட்டிக்கு முன்னேறி இருந்த கொல்கத்தா அணி, அதில் 2 முறை கோப்பையை கைப்பற்றி இருந்தது மற்றொரு சிறப்பம்சமான விஷயமாகும்.

மேலும் கொல்கத்தா அணியின் ஆலோசகரான கவுதம் கம்பீர், ஆர்சிபி பற்றி பல முறை விமர்சன கருத்துக்களை வெளியிட்டுள்ளதால் இந்த முறை அவர்கள் இருவரும் ஃபைனல்ஸில் மோதினால் சிறப்பாக இருக்கும் என்றும் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

சற்று முன்