- Advertisement -
Homeகிரிக்கெட்எந்த சீசனிலும் கொல்கத்தா செய்யாத சம்பவம்.. கம்பீர் - ஷ்ரேயஸ் காம்போவில் தட்டி தூக்கிய படை..

எந்த சீசனிலும் கொல்கத்தா செய்யாத சம்பவம்.. கம்பீர் – ஷ்ரேயஸ் காம்போவில் தட்டி தூக்கிய படை..

-Advertisement-

கடந்த 2021 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி இருந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, அதன் பிறகு கடந்த இரண்டு சீசன்களில் தொடர்ச்சியாக பிளே ஆஃப் சுற்றுக்கு கூட முன்னேறாமல் வெளியேறி இருந்தது. மேலும் 2022 மற்றும் 23 ஆகிய ஆண்டுகளில் ஏழாவது இடத்தையும் கொல்கத்தா அணி புள்ளி பட்டியலில் பிடித்திருந்த சூழலில் தான் இந்த ஆண்டு அந்த அணியின் ஆலோசராக கவுதம் கம்பீர் மீண்டும் இணைந்தது மிகப்பெரிய ஒரு புத்துணர்ச்சியாகவும், தெம்பாகவும் பார்க்கப்பட்டது.

அதனை மெய்யாக்கும் வகையில் தான் இந்த தொடரிலும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியினர் ஆடி வருகின்றனர். ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா அணியில் ஏற்கனவே சுனில் நரைன், ரசல் உள்ளிட்டோர் தொடர்ந்து பல ஆண்டுகளாக கொல்கத்தா அணிக்காக அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் நிலையில் இந்த சீசனிலும் அதே ஆட்டத்தை கம்பீரமாக ஆடி வருகின்றனர். மற்ற அணிகள் தொடர்ச்சியாக முயன்று பார்த்த போதிலும் கொல்கத்தா அணியை சரிக்க முடியாத சூழலில் கம்பீரின் திட்டங்கள் அந்த அணிக்கு பெரிய சாதகமாகவும் பார்க்கப்படுகிறது.

இது இன்னும் தொடர்ந்து வரும் போட்டிகளிலும் அவர்களுக்கு வெற்றிகளை குவிக்கும் பட்சத்தில் நிச்சயம் இந்த முறை கோப்பையை கைப்பற்ற தகுதியுள்ள அணிகளில் ஒன்றாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அது மட்டுமில்லாமல் இந்த சீசனில் இதுவரை அவர்கள் ஆடியுள்ள 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று கொல்கத்தா அணி புள்ளி பட்டியலிலும் முதலிடத்திற்கு முன்னேறி உள்ளது.

இதற்கு முக்கிய காரணமாக அசல் மற்றும் சுனில் நரைன் இருந்து வருகின்றனர். மேலும் இந்த மூன்று போட்டிகளில் ஒருமுறை ரசலும், இரண்டு முறை சுனில் நரைனும் ஆட்ட நாயகன் விருதினை வென்றிருப்பது வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் தொடர்ந்து கொல்கத்தா அணிக்கு உதவியாக இருந்து வருவதையும் காட்டுகிறது.

-Advertisement-

இந்நிலையில் நடப்பு ஐபிஎல் தொடரில் மிக முக்கியமான ஒரு சம்பவத்தை செய்துள்ளது ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. இதுவரை 16 ஐபிஎல் சீசன்களில் கொல்கத்தா அணி ஆடி, இரண்டு முறை கோப்பையை வென்றுள்ள போதிலும் முதல் மூன்று போட்டிகளை தொடர்ச்சியாக அவர்கள் எந்த தொடரிலும் வென்றதே கிடையாது.

அப்படி இருக்கையில் இந்த முறை முதல் மூன்று போட்டிகளையும் வென்று சரித்திரம் படைத்துள்ள நிலையில், தாங்கள் எப்படிப்பட்ட அணியாக இருந்தாலும் ஒரு கை பார்த்து விடுவோம் என்பதை சொல்லாமல் சொல்லி உள்ளனர்.

-Advertisement-

சற்று முன்