- Advertisement -
Homeவிளையாட்டுதட்டித் தூக்கிய கொல்கத்தா.. ரோஹித் கோட்டை விட்டதை வென்ற ஷ்ரேயஸ்.. சத்தமில்லாமல் கிளம்பிய கம்மின்ஸ்..

தட்டித் தூக்கிய கொல்கத்தா.. ரோஹித் கோட்டை விட்டதை வென்ற ஷ்ரேயஸ்.. சத்தமில்லாமல் கிளம்பிய கம்மின்ஸ்..

- Advertisement-

பல விறுவிறுப்பிற்கு மத்தியில் ஆரம்பமாகி இருந்த 17 வது ஐபிஎல் சீசனின் இறுதி போட்டியின் முதல் இன்னிங்ஸ், ரசிகர்களுக்கு மிகப் பெரிய ஏமாற்றமாக இருந்தது என்பது தான் உண்மை. இந்த சீசனில் அதிரடி பேட்டிங்கிற்கு பெயர் போயிருந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, புள்ளிப் பட்டியலில் 2 வது இடத்தை பிடித்திருந்தது.

இதனால், குவாலிஃபயர் 1 போட்டியிலும் அவர்கள் தகுதி பெற, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொண்டனர். அகமதாபாத் மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் 159 ரன்களை மட்டுமே ஹைதராபாத் எடுக்க, மிக எளிதாக சேசிங் செய்து இறுதி போட்டிக்கு முன்னேறியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. இதனையடுத்து, மீண்டும் இறுதி போட்டியில் கொல்கத்தாவை சந்திக்கும் வாய்ப்பு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு கிடைத்திருந்தது.

இதனால், குவாலிஃபயர் 1 தோல்விக்கு நிச்சயம் பதிலடியை கொடுக்கும் என ஹைதராபாத் அணி மீது ரசிகர்கள் நம்பிக்கையுடன் காத்திருக்க, டாஸ் வென்று அவர்கள் ஆடிய பேட்டிங்கை பார்த்ததுமே அவர்களின் கதையும் முடிந்து போனது. ஃபைனலுடன் சேர்த்து ஹைதராபாத் அணி கடைசியாக 4 போட்டிகளில் மொத்தமாகவே முதல் விக்கெட் ஜோடி 15 ரன்களை தான் சேர்த்துள்ளது.

குவாலிபயர் 1 போட்டியில் ஹெட் விக்கெட்டை முதல் ஓவரில் எடுத்து செக் வைத்த ஸ்டார்க், இந்த முறை அபிஷேக் ஷர்மா மற்றும் ராகுல் திரிபாதி விக்கெட்டை வீழ்த்தி இருந்தார். இன்னொரு பக்கம், வந்த பந்து வீச்சாளர்கள் எல்லாம் விக்கெட்டை வீழ்த்த, 77 ரன்கள் சேர்ப்பதற்குள் 7 விக்கெட்டுகளையும் இழந்து திணறியது.

- Advertisement-

அதிரடி லைன் அப்பில் அற்புதம் செய்த ஹைதராபாத் அணியால் பின்னர் அதிலிருந்து மீளவே முடியவில்லை. இதனால், 19 வது ஓவர் முடிவதற்குள்ளேயே 113 ரன்களுக்கு ஹைதராபாத் ஆல் அவுட்டாகி இருந்தது. அதிகபட்சமாக கேப்டன் பேட் கம்மின்ஸ் 24 ரன்கள் எடுக்க, டாப் ஆர்டரில் யாருமே தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஐபிஎல் இறுதி போட்டியின் குறைந்த ஸ்கோராகவும் இது பதிவாக, தொடர்ந்து ஆடிய கொல்கத்தா அணி, இதனை அசால்ட்டாக டீல் செய்தது.

5 ஓவர்களில் அவர்கள் 50 ரன்களை கடக்க, 11 வது ஓவரில் இலக்கை எட்டிப் பிடித்தது கொல்கத்தா அணி. இதன் மூலம், 3 வது முறையாக கடந்த 2012 மற்றும் 2014 ஆகிய சீசன்களுக்கு பின்னர் ஐபிஎல் கோப்பையை சொந்தமாக்கி உள்ளது கொல்கத்தா நைட் ரைடர்ஸ். மேலும், ஐபிஎல் கோப்பையை வென்ற புது கேப்டனாகவும் ஷ்ரேயஸ் ஐயர் மாறி உள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, இந்த இறுதி போட்டிக்கு முன்பு வரை, புகைப்படத்தில் இடது பக்கம் நின்ற கேப்டன்கள் கடந்த ஆண்டில் நடந்த பல கோப்பைகளை வென்றதில்லை என்ற கருத்து இருந்து வந்தது. இதனை முதல் முறையாக இடது பக்கம் நின்று உடைத்ததுடன் கேப்டன் பேட் கம்மின்ஸின் இறுதி போட்டி வெற்றி பயணத்திற்கு முட்டுக்கட்டையும் போட்டுள்ளார் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர்.

சற்று முன்