- Advertisement 3-
Homeவிளையாட்டுஅடுத்த ஃப்ளைட் புடிச்சு ஊருக்கு போங்க.. பேஸ்பால் எல்லாம் சும்மா.. கிழித்து தொங்கவிட்ட ஸ்ரீகாந்த்..

அடுத்த ஃப்ளைட் புடிச்சு ஊருக்கு போங்க.. பேஸ்பால் எல்லாம் சும்மா.. கிழித்து தொங்கவிட்ட ஸ்ரீகாந்த்..

- Advertisement 1-

இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை வெற்றியுடன் ஆரம்பித்து ஏறுமுகம் கண்டிருந்த பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி, அடுத்த இரண்டு டெஸ்ட் போட்டிகளில் தோல்வியடைந்து இறங்கு முகம் கண்டுள்ளது. மிகச் சிறப்பாக தாங்க ஆடி வெற்றியை கண்ட போதிலும் அதன் பின்னர் சில பெரிய தவறுகளின் காரணமாக இந்திய அணிக்கு எதிராக தோல்வியை தழுவவும் நேரிட்டது.

அது மட்டுமில்லாமல் பேட்டிங், பவுலிங் ஆன இரண்டிலுமே இந்திய அணி அனுபவம் குறைந்திருந்த போதிலும் அவர்களை சமாளிக்க முடியாமல் கடுமையாக திணறினர் இங்கிலாந்து வீரர்கள். டெஸ்ட் போட்டிகளில் பொதுவாக நிதானமாக ஆடி தான் ரன் சேர்ப்பார்கள். ஆனால் இங்கிலாந்து அணியோ சமீபகாலமாக நியூசிலாந்து அணியின் முன்னாள் அதிரடி வீரர் ப்ரெண்டன் மெக்கல்லம் பயிற்சியாளராக இருப்பதால் அவரது பாணியில் பேஸ்பால் என்ற பெயரில் அதிரடி ஆட்டத்தை கையாண்டு வருகின்றது.

இதன்படி அவர்கள் முதல் பந்தில் இருந்தே டி 20 போட்டிகளை போல சிக்ஸர்கள் மற்றும் ஃபோர்களை குறி வைத்து ரன் அடிப்பது தான் அவர்களின் குறிக்கோளாகவும் உள்ளது. அப்படி இங்கிலாந்து அணி ஆடி வரும் இந்த பேஸ்பால் ஆட்டம் இந்திய அணிக்கு எதிரான தொடரில் சுத்தமாக எடுபடவில்லை என்றே சொல்லலாம்.

இதனால் அவர்கள் மீது கடுமையான விமர்சனங்களும் முன் வைக்கப்பட்டு வருவதுடன் பேஸ்பால் ஆட்டத்தை கைவிடுமாறும் சிலர் வலியுறுத்தி வருகின்றனர். அதன் பெயரில், பென் ஸ்டோக்ஸ் மற்றும் இங்கிலாந்து அணிக்கு கடும் நெருக்கடி உருவாகியுள்ளது. இதனால் மீதமுள்ள இரண்டு டெஸ்டிலும் இங்கிலாந்து இந்திய அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்ற வேண்டிய ஒரு இக்கட்டான சூழலிலும் அவர்கள் உள்ளனர்.

- Advertisement 2-

இந்நிலையின், இந்திய அணியின் முன்னாள் வீரரான கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், இங்கிலாந்தின் தோல்வி குறித்து சில விமர்சனங்களை முன் வைத்துள்ளார். “இங்கிலாந்து அணி முடிந்தால் அடுத்த ஃப்ளைட் பிடித்து சொந்த நாட்டிற்கே திரும்பி விடலாம். ஆனால் இன்னும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் அவர்கள் விளையாட வேண்டி உள்ளது. பேஸ்பால் என்ற பெயரில் இவர்களாக தான் ஒன்றை பரப்பிக் கொண்டு மிகப் பெரிய எதிர்பார்ப்பையும் உருவாக்கி விட்டார்கள்.

ஆனால் இந்திய மண்ணைப் பொறுத்த வரையில் அவர்கள் சிறப்பாக பேட்டிங் செய்யவும், பந்து வீசவும் திறன் தான் அதிகமாக வேண்டும். இந்த பேஸ்பால் முறை நீண்ட நாட்களுக்கு வேலை செய்யும் என நான் கருதவில்லை. அதிரடியாக ஆடினாலும் அது எல்லா வீரர்களாலும் கண்டிப்பாக முடியாது” என ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

சற்று முன்