வீடியோ : தோனியின் புத்திசாலித்தனமான யோசனையால் முதல் பந்திலேயே விக்கெட்டை பறிகொடுத்த – லக்னோ கேப்டன் பாண்டியா

- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 45-வது லீக் போட்டியானது இன்று லக்னோ மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், க்ருனால் பாண்டியா தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. அந்த வகையில் இன்று டாசில் வெற்றி பெற்ற சென்னை அணியின் கேப்டன் தோனி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார்.

அதன்படி தற்போது முதலில் விளையாடி வரும் லக்னோ அணியானது மழை குறுக்கீடு காரணமாக 19.2 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 125 ரன்கள் குவித்துள்ளது. இன்னும் நான்கு பந்துகளை விளையாடி முடிக்கும் வேளையில் மழை காரணமாக சில ஓவர்கள் குறைக்கப்பட்டு சென்னை அணி தொடர்ந்து விளையாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியின் போது லக்னோ மைதானத்தின் கடினத்தன்மை காரணமாக துவக்கத்திலேயே அந்த அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதிலும் குறிப்பாக முதல் 7 ஓவர்களின் முடிவிலேயே அந்த அணி நான்கு விக்கெட்டுகளை இழந்து 34 ரன்கள் மட்டுமே குவித்து மிகவும் தடுமாறியது. அதிலும் குறிப்பாக இந்த போட்டியின் ஆறாவது ஓவரை வீசிய சிஎஸ்கே சுழற்பந்து வீச்சாளர் மகேஷ் திக்ஷனா அடுத்தடுத்து மனன் வோரா மற்றும் க்ருனால் பாண்டியா ஆகியோரை ஆட்டமிழக்க வைத்து வெளியேற்றினார்.

- Advertisement -

அதிலும் மனன் வோரா தீக்ஷனா பந்தில் போல்டாகி வெளியேறியிருந்தாலும் அதற்கு அடுத்து பேட்டிங் செய்ய வந்த லக்னோ அணியின் கேப்டன் க்ருனால் பாண்டியாவை தோனி தனது அற்புதமான ஃபீல்டிங் செட்டப் மூலமாக வீழ்த்தி இருந்தார். இது குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வகையில் க்ருனால் பாண்டியா பேட்டிங் செய்ய வந்ததுமே டெஸ்ட் போட்டியில் நிற்க வைப்பது போன்று ரகானேவை ஸ்லிப் பகுதியில் கொஞ்சம் தள்ளி பின்னால் நிற்க வைத்திருந்தார்.

தீக்ஷனாவும் சரியாக பந்தை பிட் ஆஃப் சைடில் ஸ்விங் செய்ய க்ருனால் பாண்டியா அந்த பந்தை தட்டி விட நினைத்து எட்ஜ் வாங்கினார். இதன் காரணமாக பந்து நேராகவின் கைகளுக்கு சென்றது அதனால் போட்டியின் முதல் சந்தித்த முதல் பந்திலையே ஏமாற்றத்துடன் வெளியேறினார் தோனி அமைத்த இந்த பில்டிங் செட்டப் போனது தற்போது அனைவரும் பாராட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

- Advertisement -

சற்று முன்