- Advertisement -
Homeகிரிக்கெட்ஹர்திக்கை விட செம ஷார்ப்.. ஐபிஎல் ஸ்டார்ட் ஆகுறதுக்கு முன்னாடியே க்ருனால் பாண்டியா செஞ்ச...

ஹர்திக்கை விட செம ஷார்ப்.. ஐபிஎல் ஸ்டார்ட் ஆகுறதுக்கு முன்னாடியே க்ருனால் பாண்டியா செஞ்ச விஷயம்..

-Advertisement-

முந்தைய ஐபிஎல் தொடர்கள் எந்த அளவிற்கு விறுவிறுப்பாக நடைபெறுமமோ அதே வகையில் 17வது ஐபிஎல் சீசனும் தற்போது அமர்க்களமாக நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் ருத்துராஜ் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 2 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. அவர்களைத் தொடர்ந்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

இந்த தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, இதுவரை ஆடியுள்ள மூன்று போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளி பட்டியலிலும் ஏழாவது இடத்தில் உள்ளது. இவை அனைத்தையும் விட மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ரோஹித் ஷர்மாவை மாற்றிவிட்டு ஹர்திக் பாண்டியா கேப்டனான நிலையில் அந்த அணியின் மீதான எதிர்பார்ப்பும் பல மடங்கு அதிகரித்து இருந்தது.

விமர்சனங்களும் அதே வேளையில் ஹர்திக் பாண்டியா கேப்டன்சி மீதான வரவேற்பும் அதிகமாக இருக்க அவர் எப்படி உண்மையாக வழிநடத்த போகிறார் என்பதை அறிந்து கொள்ளும் ஆவலும் ரசிகர்களிடையே தொற்றிக் கொண்டது. மேலும் மும்பை ரசிகர்கள் அவர் மீது ஆத்திரத்தில் இருந்ததால் ரோஹித் ரசிகர்கள் கூட மும்பை அணியை ஜெயிக்க வேண்டாம் என்று தான் எதிர்பார்த்து வருகின்றனர்.

அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக தான் ஹர்திக் பாண்டியாவும் இதுவரை நடந்த இரண்டு போட்டிகளில் கேப்டன்சி செய்துள்ளார். முதல் போட்டியில் குஜராத் அணிக்கு எதிராக தோல்வியடைந்த மும்பை அணி இரண்டாவது போட்டியில் ஹைதராபாத் அணிக்கு எதிராகவும் பரிதாபமாக போராடி தோல்வி அடைந்திருந்தது.

-Advertisement-

மேலும் ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்ஷியில் பவுலிங் ரொட்டேஷன் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் கடுமையான விமர்சனத்தை சந்தித்து வரும் நிலையில் இனி வரும் போட்டியில் அவர் எப்படி தனது அணியை தயார் செய்வார் என்பதும் கேள்விக்குறியாகி உள்ளது. அதே வேளையில் அவரது மூத்த சகோதரரான க்ருணால் பாண்டியா லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியில் இடம் பெற்றுள்ளதுடன் சமீபத்தில் பஞ்சாப் அணிக்கு எதிராக நடந்து முடிந்த போட்டியில் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் கலக்கி இருந்தார்.

மேலும் இந்த போட்டியில் லக்னோ அணி வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் இளம் வீரர் மயங்க் யாதவ். நூறு ரன்களுக்கு விக்கெட் இழப்பின்றி இருந்த பஞ்சாப் அணியை முதல் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றி பின்னர் சேசிங் செய்யவிடாமல் தடுத்து நிறுத்திய மயங்க் யாதவ் ஆட்டநாயகன் விருதையும் தனது அறிமுக ஐபிஎல் போட்டியிலே வென்றிருந்தார்.

அப்படி ஒரு சூழலில் ஐபிஎல் தொடர் ஆரம்பமாவதற்கு முன்பாகவே மயங்க் யாதவ் பற்றி க்ருணால் பாண்டியா தெரிவித்த கருத்து அதிக கவனம் பெற்று வருகிறது. லக்னோ அணியில் இடம்பெற்றுள்ள நிக்கோலஸ் பூரன் மற்றும் குருணால் பாண்டியா ஆகியோர் இந்த ஆண்டு இடம்பெற்ற இளம் வீரர்கள் குறித்து பேசிக் கொண்டிருந்தனர்.

அந்த சமயத்தில் குருணால் பாண்டியாவிடம் தாங்கள் இந்த முறை நமது அணியில் எதிர்பார்க்கும் வீரர் யார் என்ற கேள்வியை கேட்க இதற்கு பதில் சொன்ன க்ருணால் பாண்டியா, “மிக வேகமாக பந்து வீசக்கூடிய மயங்க் யாதவை தான் பெரிதும் எதிர்பார்க்கிறேன். அவர் பந்து வீசுவதை பார்க்கும் போது போட்டிகளில் எப்படி செயல்படுவார் என்பதை பார்க்கவும் ஆர்வமாக இருக்கிறேன்” என குறிப்பிட்டிருந்தார்.

இந்த சீசனில் ஹர்திக் பாண்டியாவின் முடிவுகள் பெரும் விமர்சனத்தை உண்டு பண்ணிவரும் அதே வேளையில் அவரது சகோதரர் இளம் வீரரை பற்றி சரியாக கணித்திருந்த விஷயம் தற்போது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தில் பேசு பொருளாக மாறி உள்ளது.

-Advertisement-

சற்று முன்