- Advertisement 3-
Homeவிளையாட்டுஎல்லாத்துக்கும் காரணம் நான் தான். இதுக்கு கைல் ஒத்துவருவார்னு நெனச்சோம் - லக்னோ கேப்டன் க்ருனால்...

எல்லாத்துக்கும் காரணம் நான் தான். இதுக்கு கைல் ஒத்துவருவார்னு நெனச்சோம் – லக்னோ கேப்டன் க்ருனால் பாண்டியா

- Advertisement 1-

மும்பை மற்றும் லக்னோ அணிகளுக்கு இடையே நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடப்பு பதினாறாவது ஐபிஎல் தொடரின் எலிமினேட்டர் போட்டி நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மும்பை அணியானது 81 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணியை தோற்கடித்து பழி தீர்த்தது.

ஏற்கனவே லக்னோ அணிக்கு எதிராக மும்பை அணி இதுவரை விளையாடியுள்ள மூன்று போட்டியில் தோல்வியை சந்தித்திருந்த வேளையில் இந்த முக்கியமான எலிமினேட்டர் போட்டியில் அவர்களை முதல் முறையாக வீழ்த்தி மும்பை அணி இரண்டாவது குவாலிபயர் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த எலிமினேட்டர் போட்டியில் முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் குவிக்க பின்னர் 183 ரன்கள் அடித்தால் வெற்றியின் இலக்குடன் விளையாடிய லக்னோ அணியானது 101 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இதன் காரணமாக 81 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த போட்டியில் அடைந்த தோல்வி குறித்து பேசிய லக்னோ அணியின் கேப்டன் க்ருனால் பாண்டியா கூறுகையில் : நாங்கள் இந்த போட்டியின் போது சேஸிங்கில் ஒரு கட்டத்தில் நல்ல நிலையில் தான் இருந்தோம். ஆனால் அனைத்துமே தவறாக சென்று முடிந்தது. நாங்கள் இன்னும் சிறப்பாக பேட்டிங் செய்திருக்க வேண்டும்.

- Advertisement 2-

அதிலும் குறிப்பாக நான் ஆட்டம் இழந்தது மிகவும் தவறான ஒன்று. தவறான ஷாட்டை தவறான நேரத்தில் விளையாடி ஆட்டமிழந்தேன். இந்த தோல்விக்கு நானே பொறுப்பேற்றுக் கொள்கிறேன். அதே போன்று முதல் 20 ஓவர்களில் பந்து எப்படி சிறப்பாக பேட்டிற்கு வந்ததோ அதே போல தான் எங்களுக்கும் வந்தது. நாங்கள் இன்னும் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு இருந்தால் நிச்சயம் இந்த சேஸிங்கை வெற்றிகரமாக நிறைவு செய்திருக்க முடியும் ஆனால் டைம் அவுட்டிற்கு பிறகு நாங்கள் சிறப்பாக ஆடவில்லை.

இதையும் படிக்கலாமே: இது ஒன்னும் புதுசு இல்ல – நாங்க வருவோம், ஜெயிப்போங்கரது எதிர்பாத்தது தான்.. இளம் வீரர்களை நான் இப்படி தான் நடத்துவேன் – ரோகித் சர்மா பேச்சு.

மும்பை அணியின் பேட்ஸ்மேன்கள் வேகப்பந்து வீச்சாளர்களை சிறப்பாக எதிர்கொண்டார்கள். அதன் காரணமாக நாங்கள் ஸ்பீன்னர்களை ஆரம்பத்திலேயே பௌலிங் செய்ய இறக்கினோம். அதே போல குயின்டன் டீ காக் ஒரு சிறந்த பிளேயர் என்றாலும் இந்த களத்திற்கு கைல் மேயர்ஸ் இருந்தால் சிறப்பாக இருக்கும் என்று எண்ணி அவரை உள்ளே எடுத்தோம் என க்ருனால் பாண்டியா கூறியது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்