- Advertisement 3-
Homeவிளையாட்டுபாலிவுட் நடிகை கூட கல்யாணமா.. சீக்கிரமா அறிவிப்பு வரும்.. திருமண விஷயத்தில் குல்தீப் யாதவ் வெச்ச...

பாலிவுட் நடிகை கூட கல்யாணமா.. சீக்கிரமா அறிவிப்பு வரும்.. திருமண விஷயத்தில் குல்தீப் யாதவ் வெச்ச ட்விஸ்ட்..

- Advertisement-

இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஜிம்பாப்வே நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கே 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது. ஆனால் இந்திய ரசிகர்கள் அதனையே மறந்து விட்டு டி20 உலக கோப்பையை வென்ற கொண்டாட்டத்தில் இருந்து இன்னும் வெளியே வராமல் இருக்கின்றனர்.

இந்திய அணி ரோஹித் ஷர்மா தலைமையில் இந்த ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நடந்த டி20 உலக கோப்பையை தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் அவர்களை வீழ்த்தி வென்றதுடன் வரலாறு படைத்திருந்தது. இந்த தொடர் முழுக்க இந்திய அணியில் ஒவ்வொரு வீரர்களும் நல்ல பங்களிப்பை அளித்திருந்ததால் இறுதிப் போட்டியிலும் அதனை தவறாமல் அனைவரும் செய்ய இந்திய அணி தென் ஆப்ரிக்காவை ஒரு திரில் போட்டியில் வீழ்த்தி வெற்றி பெற்றிருந்தது.

- Advertisements -

13 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு உலக கோப்பையையும், 17 ஆண்டுகளுக்கு பிறகு டி20 உலக கோப்பையும் இந்திய அணி வெற்றி பெற்றதால் அதனை நாடே கடந்து பத்து நாட்களாக கொண்டாடி தீர்த்து வருகிறது. ரோஹித், விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா, ஷிவம் துபே, சூர்யகுமார் யாதவ், அர்ஷ்தீப் சிங், பும்ரா என பலரும் இந்தியாவிற்கு திரும்பி இருந்த போது மும்பையில் அவர்களுக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டு இருந்தது.

பேருந்தில் உலக கோப்பையுடன் அவர்கள் ரசிகர்கள் கூட்டத்திற்கு மத்தியில் கொண்டாட்டத்துடன் வலம்வர, மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது. இதனைத் தொடர்ந்து பல வீரர்களும் தங்களின் சொந்த மாநிலத்தில் செல்ல, அங்கேயும் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது.

- Advertisement-

அப்படி ஒரு சூழலில், சொந்த ஊர் திரும்பி இருந்த குல்தீப் யாதவ், சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் தனது திருமணம் குறித்தும், ரோஹித் ஷர்மா குறித்தும் பேசிய கருத்துக்கள் அதிக கவனம் பெற்று வருகிறது. “இந்த உலக கோப்பை ரோஹித் ஷர்மாவுக்கானது. அவர் தான் இந்த அணியை திட்டம் போட்டு உருவாக்கி வழிநடத்தி இருந்தார். அணியின் மீட்டிங்கில் அவருடைய அணுகுமுறையும் போட்டிகளில் தொடக்கத்தில் பேட்டிங் செய்து அணியை முன் நின்று வழி நடத்தியதும் அருமையாக இருந்தது. இதனால் இந்த கோப்பை அவரையே தான் சேரும்” எனக் கூறி இருந்தார்.

இதேபோல கோலி பற்றியும் சில கருத்துக்களை குறிப்பிட்டுள்ள குல்தீப் யாதவ், தனது திருமணம் குறித்தும் சில முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளார். குல்தீப் யாதவ் ஒரு பாலிவுட் நடிகையை திருமணம் செய்து கொள்ள உள்ளதாக சில தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் இது பற்றி பேசியுள்ள குல்தீப் யாதவ், “எனது திருமணத்தை பற்றிய தகவல்களை விரைவில் நீங்கள் அனைவரும் அறிந்து கொள்வீர்கள். ஆனால் அது ஒரு நடிகை கிடையாது. அதைவிட முக்கியம் அவர் எனது குடும்பத்தையும் என்னையும் நன்றாக பார்த்துக் கொள்வார்” என கூறியுள்ளார்.

சற்று முன்