- Advertisement 3-
Homeவிளையாட்டுநான் எவ்ளோ சொல்லியும் கேட்கல.. குல்தீப் கேட்டும் மறுத்த அஸ்வின்.. மைதானத்திலேயே சொன்ன வார்த்தை..

நான் எவ்ளோ சொல்லியும் கேட்கல.. குல்தீப் கேட்டும் மறுத்த அஸ்வின்.. மைதானத்திலேயே சொன்ன வார்த்தை..

- Advertisement 1-

இந்திய கிரிக்கெட் அணி மீண்டும் ஒருமுறை டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகச் சிறப்பான ஆட்டத்தை இங்கிலாந்து அணிக்கு எதிராக வெளிப்படுத்தி உள்ளது. போட்டி இங்கிலாந்து பக்கம் இருந்தாலும் கூட தங்களது பவுலிங் மற்றும் பேட்டிங் என இரண்டின் மூலம் தொடர்ந்து தங்கள் பக்கம் போட்டியை வெகு விரைவில் திருப்பி அசத்தி வருகிறது இந்திய அணி. இதன் காரணமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை பட்டியலிலும் முதலிடத்திற்கு முன்னேற்றம் கண்டுள்ளனர்.

இதுவரை நடந்து முடிந்து முடிந்துள்ள இரண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலிலும் தகுதி பெற்றுள்ள ஒரே அணியாக இருக்கும் இந்தியா, இந்த முறையும் நிச்சயம் தகுதி பெற்று விடும் என்றும் தெரிகிறது. ரோஹித் ஷர்மா, அஸ்வின், ஜடேஜா என அனுபவ வீரர்கள் தொடங்கி இந்த தொடரில் அறிமுகமான துருவ் ஜூரேல், சர்பராஸ்கான் வரை பட்டையை கிளப்பி வருகின்றனர்.

பேஸ் பால் ஆட்டத்தால் பல நாடுகளை கதிகலங்க வைத்த இங்கிலாந்து அணி, இளம் வீரர்கள் அடங்கிய இந்திய அணியை சமாளிக்க முடியாமல் திணறி வருகின்றனர். அந்த திணறல் ஐந்தாவது டெஸ்டின் முதல் நாளிலும் வெளிப்பட்டுள்ளது. நன்றாக பேட்டிங்கை ஆரம்பித்த இங்கிலாந்து அணி பின்னர் குல்தீப், அஸ்வின் கைகளில் விக்கெட்டை பறிகொடுத்து 218 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி இருந்தனர்.

இதன் பின்னர் பேட்டிங் இறங்கிய இந்திய அணியும் கூட இங்கிலாந்து பந்து வீச்சாளர்களை அடித்து நொறுக்கி 135 ரன்கள் எடுத்துள்ளனர். இன்னும் ஒரு நாள் இந்திய அணி போட்டியை கைக்குள் வைத்திருந்தால் இந்த போட்டியிலும் வென்று இங்கிலாந்து அணியை ஒரே ஒரு வெற்றியுடன் சொந்த மண்ணிற்கு அனுப்பி வைத்து விடலாம். அந்த முயற்சியில் தான் ரோஹித் மற்றும் இந்திய அணி வீரர்கள் ஈடுபட்டு வருவதாகவும் தெரிகிறது.

- Advertisement 2-

இதற்கிடையே இங்கிலாந்தின் பேட்டிங் முடிந்த சமயத்தில் ஒரு சம்பவம் அதிக கவனத்தை ஈர்த்திருந்தது. குல்தீப் ஐந்து விக்கெட்டுகளை எடுக்க அஸ்வின் நான்கு விக்கெட்டுகளை எடுத்திருந்தார். பொதுவாக 5 விக்கெட்டுகள் எடுக்கும் பந்து வீச்சாளர் முன்னே நடந்து செல்ல பின்னர் மற்ற வீரர்கள் செல்வார்கள். அப்படி இந்த போட்டியில் செல்ல வேண்டியிருந்த குல்தீப், 100வது டெஸ்டில் நான்கு விக்கெட்டுகளை எடுத்த அஸ்வின் கையில் பந்தை கொடுத்து நடக்கும்படி அறிவுறுத்தினார்.

அப்படி இருந்த போதிலும் அஸ்வின் அந்த பந்தை வாங்காமல் மீண்டும் குல்தீப்பிடம் கொடுத்து அவரை முன்னே நடத்தி செல்லும்படி தேற்றி அனுப்பி இருந்தார். அதன் பின்னரே குல்தீப் நடந்து சென்றார். இந்த நிலையில் இது பற்றி பேசியுள்ள குல்தீப் யாதவ், “அஸ்வின் ரொம்ப அடக்கமானவர். கடந்த ஏழு ஆண்டுகளாக நானும் அவருடன் கிரிக்கெட் ஆடி வருகிறேன். அப்படி ஒரு சூழலில் அவரிடம் இருந்து நிறைய விஷயங்களை கற்றுக் கொள்வதும் அற்புதமாக உள்ளது.

அவர் நூறாவது போட்டியில் களமிறங்கி விக்கெட்டுகளை எடுத்திருந்ததால் தான் அவர் முன்னோக்கி வழிநடத்த தகுதியானவர் என்று நான் நினைத்து பந்தை வீசியிருந்தேன். ஆனால் அவர் அதனைச் செய்யாமல் ‘நான் 35 முறை 5 விக்கெட்டுகள் எடுத்து விட்டேன். இதனால் நீயே முன்னோக்கி பந்தை எடுத்துச் செல்’ என என்னிடம் கூறி அனுப்பினார்” என குல்தீப் யாதவ் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

தன்னைவிட இளம் வீரராக இருந்தபோதிலும் அவரை மதித்து அவரது விக்கெட் சாதனையை எண்ணி சீனியர் வீரராக அஸ்வின் செய்த செயல் சரி என பலரும் மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டு வருகின்றனர்.

சற்று முன்