பைனலிலும் இதையே செய்ங்க.. மெயின் பவுலர்ஸ் இல்லாட்டியும் இது இளம் வீரர்களை கொண்ட அணி.. ஆட்டநாயகன் குசால் மெண்டிஸ் பேச்சு

- Advertisement -

பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிக்கு எதிரான ஆசிய கோப்பையின் குரூப் ஃபோர் சுற்று நேற்று நடைபெற்றது. இதில் முதலில் டாஸ் வென்ற பாகிஸ்தான், பேட்டிங் செய்ய தீர்மானித்தது. மழை காரணமாக இந்த போட்டியின் ஓவர்கள் 42 ஆக குறைக்கப்பட்டது.

இந்த நிலையில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணியின் துவக்க வீரர் அப்துல்லா ஷபீக்
69 பந்துகளில் 52 ரன்கள் விலாசி நல்ல ஒரு துவக்கத்தை கொடுத்தார். எனினும் மற்றொரு துவக்கு வீரரான ஃபகார் ஜமான் 4 ரண்களுக்கு அவுட் ஆக, கேப்டன் பாபர் அசாம் 29 ரன்களில் வெளியேறினார். ஆனால் விக்கெட் கீப்பர் ரிஸ்வான் 73 பந்துகளை 86 ரன்கள் அடித்து அணியை தடுமாற்றத்தில் இருந்து மீட்டார்.

- Advertisement -

ஆனால் அடுத்தடுத்து வந்து வீரர்களான முகமது ஹரீஸ், முகமது நவாஸ் போன்றோர் சொற்பரன்களில் வெளியேற, அடுத்து வந்த இப்திகார் அகமது முகமது ரிசவானோடு கூட்டணி சேர்ந்து நல்ல ஒரு ஸ்கோரை சேர்த்தார். அவர் 40 பந்துகளில் 47 ரன்கள் விலாசினார். இதன் மூலம் பாகிஸ்தான் அணி 42 ஓவர்களில் ஏழு விக்கெட் இழப்பிற்கு 252 ரன்கள் குவித்தது.

இலங்கையின் பௌலர்களானமதீஷ பத்திரன மூன்று விக்கெட்டுகள் வீழ்த்த, பிரமோத் மதுஷன் 2 விக்கெட்டுகளை சாய்த்தார். மகேஷ் தீக்ஷனா மற்றும் துனித் வெல்லலகே தலா பெரு விக்கெட்டை விழித்தனர்.

- Advertisement -

இலங்கை அணியின் பேட்டிங்கை பொறுத்தவரை ஆரம்பத்தில் இருந்தே வீரர்கள் மெது மெதுவாக ஆடி வந்தனர். துவக்கி வீரரான பாத்தும் நிஸ்ஸங்க 29 ரண்களில் வெளியேற குசல் பெரேரா 17 ரன் இருக்கும்போது ரன் அவுட் ஆனார். ஆனால் அடுத்து வந்தகுசல் மெண்டிஸ் மற்றும் சதீர சமரவிக்ரம ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

சதீர சமரவிக்ரம 48 ரன்கள் சேர்க்க, அடுத்து வந்த சரித் அசலங்கா 49 ரன்கள் சேர்த்தார். கடைசி ஓவர் கடைசி பந்து வரை இந்த போட்டியானது சென்றது. இதில் இலங்கை அணி 252 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. இந்த போட்டியில் 91 ரன்கள் அடித்த குசல் மெண்டிசுக்கு பிளேயர் ஆப் தி மேட்ச் விருது கொடுக்கப்பட்டது. அப்போது பேசிய அவர் கூறியதாவது,

இன்றைய போட்டியில் என்னுடைய பெர்ஃபார்மென்ஸ் எனக்கு மகிழ்ச்சிகரமாக இருந்தது. பைனலுக்கு நுழைவதில் மகிழ்ச்சி. கடைசி நேரத்தில் விழுந்த இரண்டு விக்கெட்டுகள் எங்களை பதற்றம் அடைய செய்தது. இருப்பினும் சரித் அசலங்கா களத்தில் இருந்தது எங்களுக்கு நம்பிக்கை அளித்தது. ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் அவர் இதை ஏற்கனவே செய்து காட்டியுள்ளார்.

அதேபோன்று நாங்கள் சிறப்பாக பௌலிங் வீசினோம் என்று நம்புகிறேன். ஹசரங்கா, லகிரு குமாரா, சமீரா என மூன்று முக்கிய பவுலர்கள் விளையாட வில்லை என்றாலும், அணியில் இடம்பெற்றிருந்த பவுலர்கள் அனைவரும் சிறப்பாக பந்து வீசினார்கள். இது ஒரு இளம் வீரர்களை கொண்ட அணியாக உள்ளது. எங்களை ஆதரித்த அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி. இதே போன்று பைனலிலும் செய்யுங்கள். உங்கள் ஆதரவு நிச்சயம் எங்களுக்கு தேவை என்று குசால் மெண்டிஸ் கூறியுள்ளார்.

- Advertisement -

சற்று முன்