- Advertisement 3-
Homeவிளையாட்டுஒரு முட்டாள் கூட இத செஞ்சி விக்கெட்டை எடுக்க முடியும்... சுத்தமா தகுதி இல்லாத வீரர்.....

ஒரு முட்டாள் கூட இத செஞ்சி விக்கெட்டை எடுக்க முடியும்… சுத்தமா தகுதி இல்லாத வீரர்.. அஸ்வின் குறித்து கடுமையாக பேசிய லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன்

- Advertisement 1-

இந்தியாவில் எதிர்வரும் அக்டோபர் 5-ஆம் தேதி முதல் நவம்பர் 19-ஆம் தேதி வரை ஐசிசி-யின் 13-வது உலக கோப்பை தொடரானது நடைபெற உள்ளது. இந்திய மண்ணில் நடைபெற இருக்கும் இந்த உலக கோப்பை தொடரில் சுழற்பந்து வீச்சுக்கு சாதகம் அதிகம் இருக்கும் என்பதனால் அனைத்து அணிகளுமே தங்களது சுழற்பந்து வீச்சாளர்களை வலுப்படுத்தி வருகிறது. அந்த வகையில் இந்த உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் அஸ்வின், குல்தீப் யாதவ் மற்றும் ஜடேஜா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அதிலும் குறிப்பாக கடந்த 2011-ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் இடம் பெற்றிருந்த அஸ்வின் 2015-ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் விளையாடியிருந்தாலும் 2019-ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் இந்திய அணியில் இருந்து கழட்டி விடப்பட்டார். அதன் பின்னரும் தனது தொடர்ச்சியான கடின உழைப்பினால் மீண்டும் கம்பேக் கொடுத்த அஸ்வின் 2021 மற்றும் 2022 டி20 உலக கோப்பையின் போது இந்திய அணியில் இடம் பிடித்து விளையாடியிருந்தார்.

இந்நிலையில் 2023-ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடருக்கான அணியில் இடம்பெற மாட்டார் என்று கருதப்பட்ட அஸ்வின் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சமீபத்திய ஒருநாள் தொடரில் மீண்டும் கம்பேக் கொடுத்து அசத்தியிருந்தார். அதோடு அக்சர் பட்டேலுக்கு ஏற்பட்ட காயம் காரணமாக மாற்றுவீராக இந்தியா உலகக் கோப்பை அணியில் இடம் பிடித்துள்ளார்.

இந்த தொடரில் எதிரணி வீரர்களுக்கு சவால் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படும் அஸ்வின் குறித்து பலரும் பாராட்டிய வேளையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன் அஸ்வின் குறித்து வெளிப்படுத்தியுள்ள சில கருத்துக்கள் ரசிகர்கள் மத்தியில் தற்போது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் லஷ்மன் சிவராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள ஒரு பதிவில் :

- Advertisement 2-

இந்தியாவில் நடைபெறும் இந்த உலகக் கோப்பை பற்றி வர்ணிக்க ஒரு தரமான ஸ்பின்னர் வர்ணனையாளர் குழுவில் இல்லை. இப்படி இருக்கும் பட்சத்தில் இந்திய மக்கள் சுழற்பந்து வீச்சினை பற்றி எவ்வாறு தெரிந்து கொள்வார்கள் என்று எக்ஸ் தலத்தில் ஒரு பதிவை வெளியிட்டார். அந்த பதிவில் ரசிகர் ஒருவர் செய்த கமெண்டில், சமீப காலங்களில் இந்திய பேட்ஸ்மேன்கள் சுழற்பந்துக்கு எதிராக தடுமாறுகிறார்கள். அப்படி இருக்கையில் அஸ்வின் தனது பந்து வீச்சு மற்றும் பேட்டிங்கில் எப்படி தன்னை நிரூபிக்க போகிறார் என்று கேட்டிருந்தார்.

அதற்கு பதில் அளித்த லஷ்மன் சிவராமகிருஷ்ணன் : இந்தியாவில் இருக்கும் பிட்ச்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் அதிக விக்கெட்டுகளை எடுக்க வேண்டும் என்பதற்காக அவருக்கு சாதகமாக உருவாக்கப்படுகின்றன. அதனாலேயே எதிரணியின் வீரர்கள் அவரது சூழலுக்கு எதிராக தடுமாறுகின்றனர். ஆனால் தென்னாபிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் அஸ்வினின் ரெக்கார்டை எடுத்து பாருங்கள்.

எந்த முட்டாளும் இந்தியாவில் சிதைந்த பிட்ச்களில் விக்கெட்டுடை எடுப்பார்கள். ஏர்போட்டில் இருந்து நேராக கிரௌண்டிற்கு சென்று, அங்குள்ள ஊழியர்களிடம் பிட்சின் எந்த இடத்தில் என்ன செய்யவேண்டும் என்று கூறியிருப்பதை நானே என் கண்களால் பார்த்துள்ளேன்.

lakshman sivaraman

இந்தியாவில் 378 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். ஆனாலும் இன்று வரை அவர் அணியில் இருக்க காரணம் வேறு ஆள் இல்லாததால் தான். சுத்தமாக உடல் தகுதி இல்லாத வீரர் அவர். எல்லாவிற்கும் ஏதாவது ஒரு சாக்கு சொல்பவர் என்று சரமாரியாக அஸ்வினை லஷ்மன் சிவராமகிருஷ்ணன் விமர்சித்துள்ளார். அவரது இந்த கருத்துக்கள் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்