- Advertisement -
Homeவிளையாட்டுஅந்த தமிழக வீரர் தான் பவுலிங் கோச் ஆகியிருக்கணும்.. திட்டம் போட்டு தடுத்து மோர்னே மோர்கல்...

அந்த தமிழக வீரர் தான் பவுலிங் கோச் ஆகியிருக்கணும்.. திட்டம் போட்டு தடுத்து மோர்னே மோர்கல் மூலம் காய் நகர்த்திய கம்பீர்..

- Advertisement-

இந்திய அணியின் பேட்ஸ்மேனாக இருந்த போது கவுதம் கம்பீர் சாதித்தது ஏராளமான விஷயங்கள். 2007 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை மற்றும் 2011 ஆம் ஆண்டு ஒரு நாள் உலக கோப்பை என இரண்டையும் இந்திய அணி வென்ற போது தேவைப்படும் நேரத்தில் ரன் அடித்து இக்கட்டான சூழலிலும் திறம்பட ஆடி இருந்தார் கம்பீர்.

அதுவும் குறிப்பாக இரண்டு தொடரின் இறுதிப் போட்டிகளிலும் ரன் சேர்க்க முடியாமல் தவித்த இந்திய அணியை மீட்டுக் கொடுத்ததும் அவர்தான். இதனைத் தொடர்ந்து ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியை சிறப்பாக வழி நடத்தியதன் காரணமாக தற்போது இந்திய அணியின் பயிற்சியாளராகவும் செயல்பட்டு வருகிறார் கம்பீர்.

கிரிக்கெட்டில் அவருடைய தொலைநோக்கு பார்வை, வீரர்களை பயன்படுத்தும் முறை உள்ளிட்ட பல விஷயங்கள் ஐபிஎல் தொடரின் மூலம் பிசிசிஐயின் கவனத்தையும் கம்பீர் பக்கம் ஈர்த்திருந்தது. தொடர்ந்து இலங்கை அணிக்கு எதிரான தொடர்களில் இருந்து இந்திய அணியின் பயிற்சியாளராகவும் கவுதம் கம்பீர் செயல்பட்டு வருகிறார்.

இதில் ஒருநாள் தொடரில் இந்திய அணி மோசமாக தோல்வி அடைந்திருந்தாலும் இனி வரும் தொடர்களில் அந்த பாதிப்பு எதுவும் இருக்காது என்று தெரிகிறது. இதற்கு காரணம் கம்பீருடன் இந்திய அணியில் பயிற்சியாளர்களாக இணைந்துள்ளவர்கள் தான். கம்பீர் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டதும் அவருக்கு தேவையான முன்னாள் வீரர்களை பயிற்சியாளர்களாக தேர்ந்தெடுக்கலாம் என்றும் பிசிசிஐ தெரிவித்தாக சொல்லப்படுகிறது.

- Advertisement-

இதனால் அபிஷேக் நாயர், ரியன் டெஸ்கோத் உள்ளிட்டோரை துணைப் பயிற்சியாளராக நியமித்த கம்பீர், பந்துவீச்சு பயிற்சியாளராக தென்னாபிரிக்க அணியின் முன்னாள் வீரரான மோர்னே மோர்கலை நியமித்திருந்தார். ஆனால் முன்னாள் தமிழக வீரர் ஒருவர் இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக வரவிருந்ததை கம்பீர் தடுத்ததாக சிலர் பரபரப்பு தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.

கம்பீரிடம் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான லட்சுமிபதி பாலாஜி மற்றும் வினய் குமார் ஆகியோரை பவுலிங் பயிற்சியாளர்களாக பிசிசிஐ பரிந்துரைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. ஆனால் இந்திய வீரர்கள் இரண்டு பேரை விட தென்னாப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் மோர்னே மோர்கல் தான் இந்திய அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக சரியாக இருப்பார் என்றும் கம்பீர் நேரடியாக பிசிசிஐயிடம் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது.

மோர்னே மோர்கலுடன் இணைந்து ஐபிஎல் தொடரில் கம்பீர் ஆடியுள்ளதால் அதன் அடிப்படையில் அவர் தேர்வு செய்ததாக தெரிகிறது. அதே போல, இந்திய பந்து வீச்சாளர்களை விட வெளிநாட்டு பந்து வீச்சாளர்கள் பயிற்சியாளராக வந்தால் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற வெளிநாட்டு மண்ணில் நடக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் உள்ளிட்ட தொடர்களில் கூட இந்திய அணியால் பந்து வீச்சில் அசத்த முடியும் என கம்பீர் நினைத்திருக்கலாம்.

சற்று முன்