இந்திய அணி வீரரான விராட் கோலி முழுமையான ஃபிட்னசுக்காக தனக்கு விருப்பமான பட்டர் சிக்கன் உள்ளிட்ட ஏராளமான அசைவ உணவுகளை கைவிட்டுள்ளார். 23 வயதில் உணவு பழக்கவழக்கங்களை கைவிட்ட விராட் கோலி, அதன்பின் டயட் உணவுகளை மட்டுமே பின்பற்றி வருகிறார். அதன் காரணமாக அவரின் ஃபிட்னஸும் வேற லெவலில் உள்ளது.
ஆனால் சில கிரிக்கெட் வீரர்களின் உணவு பழக்கங்கள் முழுக்க முழுக்க அசைவ உணவாக உள்ளது. சிக்கன், மட்டன், மீன் உள்ளிட்டவை மட்டுமல்லாமல் பீஃப் உள்ளிட்ட உணவுகளையும் வீரர்கள் உண்டு வருகிறார்கள். இதுகூட பரவாயில்லை, இன்னும் சில வீரர்கள் பாம்பு, வவ்வால் உள்ளிட்டவற்றை உண்டு வருவது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக சீனாவைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் பாம்பு, வவ்வால் உள்ளிட்ட உணவுகளை விரும்பி சாப்பிடுகிறார்கள். சீனாவின் கிரிக்கெட் அணி கேப்டன் வாங் குய் பாம்புகள், பேட்ஸ் உள்ளிட்டவற்றை விரும்பி சாப்பிடும் பழக்கம் கொண்டவராக இருக்கிறார். அதேபோல் பேட் சூப் உள்ளிட்ட உணவுகளை தினமும் சாப்பிடுவதகவும், அது அவரின் ஃபேவரைட் உணவு என்றும் சொல்லப்படுகிறது.
இது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் சீனாவின் பந்துவீச்சாளரான லூவோ ஷிலின் என்பவருக்கு சைவ உணவே பிடிக்காதாம், ஒவ்வொரு நாளும், 4 வேலைக்கும் அசைவ உணவையே விரும்பி சாப்பிட்டு வருகிறாராம். குறிப்பாக பாம்பு மற்றும் வவ்வால்களை விரும்பி சாப்பிட்டு வருகிறார் என்று சொல்லப்படுகிறது. சில நேரங்களில் அவற்றை பச்சையாக சாப்பிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுமட்டுமல்லாமல் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான லியுயாங் வாங் என்ற வீரர், பாம்புகள், பேட்ஸ் மற்றும் பூச்சி உள்ளிட்டவற்றை வரைமுறை இல்லாமல் சாப்பிட்டு வருகிறார். வழக்கம் போல் சைவ சாப்பிட்டே இவருக்கு ஆகாது. இதனால் அசைய உணவுகளை மட்டுமே விரும்பும் லியுயாங் வாங், வவ்வால்கள் மற்றும் நண்டுகள் உள்ளிட்டவற்றையும் சாப்பிடுகிறார்.
இந்திய கிரிக்கெட் அணியின் ஏராளமான வீரர்கள் அசைவத்தை கடந்து சைவ உணவுகளை மட்டுமே சாப்பிட்டு வரும் நிலையில், சீனாவைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் பறக்கும் விமானத்தையும், ஓடும் ரயிலையும் தவிர்த்து அனைத்தையும் உண்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.