- Advertisement -
Homeவிளையாட்டுசூப்பர் ஓவரில் பேட்டிங்கில் 30 ரன்கள், பௌலிங்கில் 2 விக்கெட்.. இருக்கையின் நுனிக்கே இட்டு சென்ற...

சூப்பர் ஓவரில் பேட்டிங்கில் 30 ரன்கள், பௌலிங்கில் 2 விக்கெட்.. இருக்கையின் நுனிக்கே இட்டு சென்ற ஜிம்பாபே வீரர். அலண்டு போன வெஸ்ட் இண்டீஸ் அணி

- Advertisement-

இந்தியாவில் இந்த ஆண்டு இறுதியில் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடரானது நடைபெற உள்ளது. இந்த உலகக் கோப்பை தொடரில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்று விளையாட இருக்கின்றன. அதில் ஐசிசி புள்ளிப்பட்டியலின் படி ஏற்கனவே நேரடியாக 8 அணிகள் இந்த உலகக் கோப்பை தொடரின் முதன்மை சுற்றில் விளையாட தகுதி பெற்று விட்டன. அதனை தவிர்த்து மீதமுள்ள இரண்டு இடங்களுக்கான தகுதி சுற்று போட்டிகள் தற்போது ஜிம்பாப்வே நாட்டில் நடைபெற்று வருகின்றன.

இந்த தகுதி சுற்றில் மொத்தம் பத்து அணிகள் பங்கேற்று விளையாடி வருகிறது. அதில் முதல் இரண்டு இடங்களில் பிடிக்கும் இரண்டு அணிகள் உலககோப்பை தொடரில் விளையாடும் வாய்ப்பினை பெறும். அந்த வகையில் இந்த உலகக்கோப்பை தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகளில் இலங்கை மற்றும் வெஸ்ட் இண்டீஸ் போன்ற மிகப் பெரிய அணிகளும் இடம்பெற்றுள்ளது அந்நாட்டு ரசிகர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. ஏனெனில் சர்வதேச கிரிக்கெட்டில் இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியும், ஒருமுறை சாம்பியன் பட்டம் வென்ற இலங்கை அணி யும் இப்படி நேரடியாக உலகக் கோப்பை தொடரில் விளையாட முடியாமல் தகுதி சுற்று வரை சென்றுள்ளது ரசிகர்களின் கவலையாக கவலையாக உள்ளது.

இந்நிலையில் இந்த உலகக் கோப்பை தகுதி சுற்றில் ஏற்கனவே ஜிம்பாப்வே அணியிடம் தோல்வியை சந்தித்த வெஸ்ட் இண்டீஸ் அணியானது தற்போது நெதர்லாந்து அணிக்கு எதிராகவும் தோல்வியை சந்தித்து மோசமான நிலையை எட்டியுள்ளது. அதன்படி நேற்று ஹராரே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற குரூப் ஏ பிரிவின் 18 வது போட்டியின் போது முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர்களின் முடிவில் ஆறு விக்கெட்டுகளை இழந்து 374 ரன்கள் குவித்தது.

வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பாக அந்த அணியின் அதிரடி ஆட்டக்காரர் நிக்கோலஸ் பூரான் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 65 பந்துகளில் 104 ரன்கள் எடுத்து அசத்தியிருந்தார். பின்னர் 375 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய நெதர்லாந்து அணியானது எளிதில் வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் வீழ்ந்து விடும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நெதர்லாந்து அணி 50 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து சரியாக 374 ரன்களை எடுத்தது.

- Advertisement-

இதன் காரணமாக போட்டி சமநிலையில் முடிந்து சூப்பர் ஓவருக்கு சென்றது. இந்நிலையில் இந்த சூப்பர் ஓவரின் போது வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள நெதர்லாந்து அணியின் ஆல்ரவுண்டர் லோகன் வான் பீக் களத்திற்கு வந்தார். அப்படி களமிறங்கிய அவர் சூப்பர் ஓவர் வீசிய ஜேசன் ஹோல்டரின் பந்துவீச்சை அற்புதமாக எதிர் கொண்டு மூன்று பவுண்டரி மற்றும் மூன்று சிக்சர் என 30 ரன்கள் குவித்தார்.

பின்னர் 31 ரன்கள் அடித்தால் வெற்றி என்று இலக்குடன் விளையாட துவங்கியது வெஸ்ட் இண்டீஸ் அணி . சூப்பர் ஓவரை வீச லோகன் வான் பீக்கே வந்தார். அந்த ஓவரில் வெஸ்ட் இண்டீஸ் அணி 8 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டை இழந்ததால் நெதர்லாந்து அணி சூப்பர் சூப்பர் ஓவரில் வெற்றி பெற்று வரலாறு படைத்தது. இந்நிலையில் இந்த சூப்பர் ஓவரில் 30 ரன்களோடு 2 விக்கெட்களை சாய்த்த லோகன் வான் பீக் வரலாற்றில் தனது பெயரை இடம்பெறச் செய்ததோடு இரண்டு முறை சாம்பியனான வெஸ்ட் இண்டீஸ் அணியை இந்த உலகக்கோப்பை தொடரிலிருந்து கிட்டத்தட்ட வெளியேற்றியுள்ளார். லோகன் வான் பீக் விளையாடிய இந்த சூப்பர் ஓவர் வீடியோவும் தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்