- Advertisement 3-
Homeவிளையாட்டுமுடிவுக்கு வந்த இந்திய அணியின் பயிற்சியாளர் பணி.. ஐபிஎல் பக்கம் திரும்பும் ராகுல் டிராவிட்.. லக்னோ...

முடிவுக்கு வந்த இந்திய அணியின் பயிற்சியாளர் பணி.. ஐபிஎல் பக்கம் திரும்பும் ராகுல் டிராவிட்.. லக்னோ அணி ஆலோசகராக நியமிக்க வாய்ப்பு… கடைசி நிமிட ட்விஸ்ட்…!

- Advertisement 1-

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருடன் இந்திய அணி பயிற்சியாளர் ராகுல் டிராவிட் உடனான பிசிசிஐ ஒப்பந்தம் முடிவுக்கு வந்தது. கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் பொறுப்பேற்று கொண்டார். அதன்பின் 2 ஆண்டுகள் பயிற்சியாளராக செயல்பட்டு வந்த ராகுல் டிராவிட், இப்போது பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் ராகுல் டிராவிட் பதவிக்கு அடுத்த பயிற்சியாளராக யார் வருவார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனிடையே விவிஎஸ் லக்‌ஷ்மண் இந்திய அணியின் பயிற்சியாளராகவும், என்சிஏ தலைவராக ராகுல் டிராவிட்டும் பொறுப்பேற்க உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இறுதி முடிவை பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா எடுப்பார் என்று பார்க்கப்படுகிறது.

இதனிடையே ராகுல் டிராவிட் ஐபிஎல் அணிகளுடன் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே லக்னோ, பஞ்சாப் உள்ளிட்ட அணிகள் ராகுல் டிராவிட்டும் பேசி வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக லக்னோ அணியின் ஆலோசகராக இருந்த கவுதம் கம்பீர் திடீரென கேகேஆர் அணியின் ஆலோசகராக மாறியுள்ளார்.

இதனால் கவுதம் கம்பீரின் இடத்திற்கு இந்திய ஜாம்பவான் வீரர் ஒருவரை கொண்டு வர லக்னோ அணி உரிமையாளர் சஞ்சீவ் கொயங்க முடிவு செய்துள்ளார். அந்த அணியின் பயிற்சியாளராக ஜஸ்டின் லாங்கர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள்ள நிலையில், இந்திய வீரர்களை அடையாளம் காண ராகுல் டிராவிட் சிறந்த ஆலோசகராக இருப்பார் என்று கூறப்படுகிறது.

- Advertisement 2-

இதனால் ராகுல் டிராவிட் லக்னோ அணியின் ஆலோசகராக ஒப்பந்தம் செய்யப்பட வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் ராகுல் டிராவிட் என்ன செய்துள்ளார் என்பதும் இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இதனால் ராகுல் டிராவிட் முடிவு மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ஏற்கனவே ராஜஸ்தான் அணிக்கு ராகுல் டிராவிட் பயிற்சியாளராக சில ஆண்டுகள் செயல்பட்டுள்ளார். அதன்பின் பிசிசிஐ மற்றும் என்சிஏ-வில் இணைந்த அவர், இளம் வீரர்களை தயார் செய்யும் பொறுப்பை ஏற்றது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்