- Advertisement -
Homeவிளையாட்டுஜெர்சி கலர் மாத்தியும் ஜெயிக்க முடியலயே.. 16 ஓவரில் முடித்த கொல்கத்தா.. அடிபணிந்த லக்னோ ஜெயிண்ட்ஸ்..

ஜெர்சி கலர் மாத்தியும் ஜெயிக்க முடியலயே.. 16 ஓவரில் முடித்த கொல்கத்தா.. அடிபணிந்த லக்னோ ஜெயிண்ட்ஸ்..

- Advertisement-

ஐபிஎல் சீசனில் இனிவரும் ஒவ்வொரு போட்டிகளும் அனைத்து அணிகளுக்குமே முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும் நிலையில் கொல்கத்தா மற்றும் லக்னோ ஆகிய அணிகள், இந்த சீசனின் 28 வது போட்டியில் மோதி இருந்தது. கம்பீரின் வருகையால் கொல்கத்தா அணி அதிக பலத்துடன் இருக்கும் நிலையில் 4 போட்டிகளில் மூன்றில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்திலும் உள்ளது.

மறுபுறம் லக்னோ அணியும் கொஞ்சம் கூட சளைக்காமல் ஐந்தில் மூன்று போட்டிகள் வெற்றி பெற்று நாலாவது இடத்தில் இருந்த நிலையில் தான் இந்த இரண்டு அணிகளும் அடுத்த போட்டியில் மோதி இருந்தது. இதில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணியில், அதிகபட்சமாக நிக்கோலஸ் பூரன் 45 ரன்களையும், கேப்டன் ராகுல் 39 ரன்களையும் அடித்திருந்தனர்.

டெல்லி அணிக்கு எதிரான போட்டியில், பேட்டிங்கில் அதிக தடுமாற்றம் கண்டிருந்த லக்னோ அணி வீரர்கள் இந்த முறையும் ரன் சேர்க்க தடுமாறினர். அதே வேளையில், சென்ற போட்டியில் கோல்டன் டக் அவுட்டாகி இருந்த பூரன், இந்த முறை சிக்ஸர்களை பறக்கவிட்டு தனது அணிக்காக நல்ல ஒரு பங்களிப்பை அளித்திருந்தார்.

இதனால் 20 ஓவர்கள் முடிவு லக்னோ அணி, ஏழு விக்கெட்டுகள் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்திருந்தது. கொல்கத்தா அணியில் அதிக விமர்சனங்களை சந்தித்திருந்த மிட்செல் ஸ்டார்க் இந்த முறை நான்கு ஓவர்கள் பந்து வீசி 28 ரன்கள் மட்டுமே கொடுத்து மூன்று விக்கெட்டுகளையும் கைப்பற்றி இருந்தார்.

- Advertisement-

தொடர்ந்து இலக்கை நோக்கி ஆடிய கொல்கத்தா அணியில் தொடக்க வீரர் சுனில் நரைன் 6 ரன்களிலும் அடுத்து வந்து இளம் ரகுவன்ஷி 7 ரன்களிலும் மோஷின் கான் பந்து வீச்சில் அடுத்தடுத்த ஓவர்களில் அவுட்டாகி இருந்தனர். ஆனால் மற்றொரு தொடக்க வீரரான பிலிப்ஸ் சால்ட் நங்கூரம் போல் நிலைத்து நின்று போன்று பவுண்டரிகளை பறக்க விட்டபடி இருந்தார்.

அவருடன் கைக்கோர்த்து மிக நிதானமாக ஆடி ரன் சேர்த்தபடி கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் ஆட, பின்னர் விக்கெட்டுகள் எதுவும் விழவில்லை. மேலும் கொல்கத்தா அணியின் வெற்றியும் எளிதாக தான் அமைந்திருந்தது. பிலிப் சால்ட் 47 பந்துகளில் 14 ஃபோர்கள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 89 ரன்களை எடுக்க, கொல்கத்தா அணி 15.4 ஓவர்களில் இலக்கை எட்டி தங்களின் நான்காவது வெற்றியை பெற்றுள்ளது.

சற்று முன்