- Advertisement 3-
Homeவிளையாட்டுசிஎஸ்கே வீரருக்கு கொக்கி போட துவங்குகிறதா லக்னோ அணி? - ஆஷஸ் டெஸ்ட்டுக்கு பிறகு வீரரை...

சிஎஸ்கே வீரருக்கு கொக்கி போட துவங்குகிறதா லக்னோ அணி? – ஆஷஸ் டெஸ்ட்டுக்கு பிறகு வீரரை புகழ்ந்து போட்ட அதிரடி ட்வீட்

- Advertisement 1-

சமீபத்தில் நடந்து முடிந்துள்ள முதலாவது ஆஷஸ் போட்டியில் ஆஸ்திரேலிய அணி திரில் வெற்றியைப் பெற்றது. இந்த போட்டியில் ஆஸி அணி வெற்றி பெற்றாலும், இங்கிலாந்து அணியும் ரசிகர்களால் பெரிதாக பாராட்டப்படுகிறது. அதற்குக் காரணம் அந்த அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸும், பயிற்சியாளர் மெக்கல்லமும்தான்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் இவர்கள் இருவரும் தங்கள் பதவியை இங்கிலாந்து அணிக்காக ஏற்றுக்கொண்டதில் இருந்து ஆட்டத்தின் போக்கையே மாற்றியுள்ளனர். அதிரடியான பேட்டிங் மற்றும் அதிரடியான முடிவுகளை எடுத்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து வருகின்றனர்.

இந்த போட்டியின் முதல் நாளில் இங்கிலாந்து அணி விளையாடிய போது 398 ரன்களுக்கு 8 விக்கெட் வீழ்ந்திருந்த போது டிக்ளேர் செய்தது ஆச்சர்யமாகப் பார்க்கப்பட்டது. ஏனென்றால் அப்போது அந்த அணியின் வீரர் ஜோ ரூட் சதமடித்து இன்னிங்ஸை அதிரடியாக எடுத்து சென்று கொண்டிருந்தார். அதனால் இன்னும் குறைந்தது 50 ரன்களாவது சேர்த்திருந்தால் இந்த போட்டியின் முடிவே கூட மாறியிருக்கும்.

ஆனால் அப்படி தான் எடுத்த முடிவுக்காக இப்போதும் வருந்தவில்லை என இங்கிலாந்து கேப்டன் ஸ்டோக்ஸ் போட்டிக்கு பின்னர் கூறியுள்ளார். இதுமட்டுமில்லாமல் கள வியூகத்திலும் முற்றிலுமான பல மாற்றங்களை செய்து கவனத்தை ஈர்த்தார்.

- Advertisement 2-

ஆஸி அணியின் தொடக்க ஆட்டக்காரர் உஸ்மான் கவாஜா விளையாடிக் கொண்டிருந்த போது அவருக்கு ஸ்லிப் வைக்காமல் 6 பீல்டர்களை ஆஃப் மற்றும் ஆன் திசையில் ஒரு குடை போல நிற்கவைத்திருந்தார். இந்த பீல்டிங், வர்ணனையாளர்களால் கேள்விக்குட்படுத்தப்பட்டது. ஆனால் கவாஜாவின் விகெக்ட்டை இந்த பீல்ட் செட்டப் மூலம் எடுத்தார். அதே போல இரண்டாவது இன்னிங்ஸில் கவாஜாவின் விக்கெட்டை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் தானே பந்துவீசி அவரை பவுல்ட் ஆக்கி வெளியேற்றினார்.

புது பந்தை எடுப்பதற்கான நேரம் வந்தும் அதை எடுக்காமல் ஜோ ரூட் மூலமாக அலெக்ஸ் கேரி விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார். இப்படி அடுத்தடுத்து ஆச்சர்யமான முடிவுகளை எடுத்து வரும் ஸ்டோக்ஸை ஐபிஎல் கிரிக்கெட்டின் அணிகளில் ஒன்றான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் “இவரை போல ஆளுமை மிக்க வீரர் யார் இருக்கிறார்?” என ட்வீட் செய்து புகழ்பாடியுள்ளது. ஸ்டோக்ஸ், ஐபிஎல் கிரிக்கெட்டில் சிஎஸ்கே அணிக்காக விளையாடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்