ஆசிய கோப்பை போட்டி, உலக கோப்பை தொடர் இந்த வருடம் கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரு சிறந்த வருடமாக உள்ளது. அதிலும் குறிப்பாக இந்தியா பாகிஸ்தான் இடையேயான போட்டியை உலகமே எதிர்பார்த்துக் காத்திருக்கிறது. இந்திய அணியை பொறுத்தவரை கோலி இந்த போட்டிகளில் மிகச் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்பது ரசிகர்களின் நம்பிக்கையாக உள்ளது.
அக்டோபர் ஐந்தாம் தேதி தொடங்கி நவம்பர் 19ஆம் தேதி வரை இந்த வருடம் இந்தியாவில் நடக்க உள்ள உலகக்கோப்பை போட்டியில் இந்தியா நிச்சயம் வெற்றி பெற அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது என்பது உலக தரம் வாய்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரின் கணிப்பாக உள்ளது. 2022 ஆம் ஆண்டு நடந்த டி20 உலகக்கோப்பை போட்டியில் கோலி எப்படி ஆடினாரோ அதே போன்ற ஆட்டத்தை இந்த உலகக்கோப்பையில் அவர் வெளிப்படுத்துவார் என்று பலர் எதிர்பார்க்கின்றனர்.
இந்த நிலையில் கோலி குறித்து பேசி உள்ள சவுத் ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் ஃபாஸ்ட் பவுலரான மகாயா நடினி, பவுலர்களுக்கு ஒரு கோரிக்கை வைத்துள்ளார். இதுகுறித்தவர் கூறுகையில், ஒரு பவுலராக விராட் கோலி பற்றி நான் ஒரு விஷயத்தை கூற வேண்டும். நீங்கள் விராட் கோலியை எக்காரணம் கொண்டும் வம்பு இழுத்து விடக்கூடாது. எந்த ஒரு பவுலராவது அப்படி செய்து விட்டால் அவ்வளவுதான் அவர் உடனே ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்த தொடங்கி விடுவார்.
அவரது போக்கில் அவரை விட்டு விடுவது தான் எதிரணி வீரர்களுக்கு நல்லது. அவர் தன் போக்கில் விளையாடி தவறுகளை ஆட்டத்தில் செய்தால் மட்டுமே எதிரணி வீரர்கள் அவரை அவுட் செய்ய முடியும். அதே சமயம் எதிரணி வீரர்கள் அவரைப் பற்றி எதுவும் கூறவில்லை என்றால் அவர் சற்று வெறுப்பாகவும் இருப்பார்.
ஒருவேளை ஏதாவது ஒரு வார்த்தை சொல்லிவிட்டால் போதும் உடனே அவர் டேஞ்சரான வீரராக மாறிவிடுவார். அதனால் அவரை அவர் போக்கில் விட்டு அவருடைய விக்கெட்டை எடுப்பது தான் புத்திசாலித்தனம் என்று மகாயா நடினி கூறி உள்ளார்.
அதேசமயம் ஒட்டுமொத்த இந்திய அணி குறித்து பேசி உள்ள மகாயா நடினி, ரோகித் சர்மா அக்ரசிவாக விளையாடக்கூடிய வீரர். கோலியோ அருமையான பேட்டர். தற்போது இந்திய அணியில் சுப்மன் கில், ஷ்ரேயஸ் ஐயர் போன்ற இளம் வீரர்களும் உள்ளனர். அவர்கள் எதிரணி பவுலர்களை பல வகையிலும் டேமேஜ் செய்ய முடியும். அவர்களுக்கு கொடுக்கப்பட்ட ரோலும் அதுவாக தான் இருக்கும்.
கோலி மற்றும் ரோஹித் அணியின் தூண்களாக இருக்கிறார்கள். மற்ற வீரர்கள் அவர்களுக்கு துணையாக இருந்து ஆடினால் இந்திய அணி மிகவும் டேஞ்சரான அணியாக மாறும் என்று அவர் கூறியுள்ளார்.