- Advertisement -
Homeவிளையாட்டுமன்கட் செய்த வீரர்... அவுட் ஆகியும் மீண்டு விளையாட அழைத்த எதிரணி கேப்டன்... களத்தில் நடந்த...

மன்கட் செய்த வீரர்… அவுட் ஆகியும் மீண்டு விளையாட அழைத்த எதிரணி கேப்டன்… களத்தில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்

- Advertisement-

பங்களாதேஷ் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒரு நாள் சர்வதேச ஆட்டம் ஷேர்-இ-பங்களா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

தொடர்ந்து சிறப்பாண ஆட்டத்தை வெளிப்படுத்திய நியூசிலாந்து அணி 254 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. தொடர்ந்து களமிறங்கிய பங்களாதேஷ் அணி 41.1 ஓவர்களில் 168 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டமிழந்து தோல்வியை தழுவியது.

முன்னதாக இந்த போட்டியின் 46 ஆவது ஓவரில் பங்களாதேஷ் அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஹசன் மஹ்மூத் பந்தை வீச சென்றார். அப்போது, நான்-ஸ்ட்ரைக்கரில் இருந்த நியூசிலாந்து அணி வீரர் ஈஷ் சோதி கிரீஸில் இருந்து சற்று வெளியேறினார்.

இதனைக் கண்ட ஹசன் மஹ்மூத் ரன் அவுட் செய்துவிட்டு நடுவரிடம் அப்பீல் கேட்டார். அதற்கு நடுவரும் அவுட் கொடுக்க, இதனை சற்றும் எதிர்பாராத சோதி பெவிலியனை நோக்கி நடக்க ஆரம்பித்தார். இருப்பினும், பங்களாதேஷ் அணியின் கேப்டன் லிட்டன் தாஸ், சற்று நேரம் தனது அணியினரிடமும் நடுவரிடமும் விவாதித்து விட்டு விக்கெட்டை வாபஸ் பெற்றுக்கொண்டார்.

- Advertisement-

இதனையடுத்து பெவிலியன் நோக்கிச் சென்ற ஈஷ் சோதியை நடுவர் அழைத்து மீண்டும் ஆட்டத்தில் களமிறங்க செய்தார். சோதி திரும்பி வந்ததும் பந்து வீச்சாளர் மஹ்மூத்தை கட்டி அணைத்துக்கொண்டார். இதனைக் கண்ட ரசிகர்கள் நெகிழ்ச்சியடைந்தனர்.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதனைக் கண்ட நெட்டிசன்கள் பங்களாதேஷ் கேப்டன் லிட்டன் தாஸ் மற்றும் பந்து வீச்சாளர் ஹசன் மஹ்மூத் ஆகிய இருவரையும் பாராட்டி வருகின்றனர். மேலும், ‘X’ பயன்பாட்டாளர்கள் இந்த வீடியோவை வெளியிட்டு, தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து ஒரு சமூக ஊடக பயனர் கூறுகையில், “சோதி மற்றும் மஹ்முத் இடையேயான இந்த அன்பு கிரிக்கெட் உலகில் மிக அழகான தருணம்” என குறிப்பிட்டுள்ளார். பங்களாதேஷ் அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஹசன் மஹ்மூத் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்