- Advertisement -
Homeவிளையாட்டுசூரியகுமார் பீல்டை மேனிபுலேட் பன்றாரு... அவர் செய்றத வேற யார் செஞ்சும் நான் பாக்கல -...

சூரியகுமார் பீல்டை மேனிபுலேட் பன்றாரு… அவர் செய்றத வேற யார் செஞ்சும் நான் பாக்கல – மார்க் வாக் பேச்சு

- Advertisement-

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் இந்தியா – ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி 99 ரண்கள் விதியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சூர்யகுமார் யாதவ் 37 பந்துகளில் 77 ரன்கள் குவித்தார்.

அதே போல கடந்த சில போட்டிகளில் பெரிதும் விமர்சனத்திற்கு உள்ளன ஷ்ரேயஸ் ஐயரும் இந்த போட்டியில் மிக சிறப்பாக விளையாடினார். இதன் மூலம் அவர் நிச்சயம் உலகக்கோப்பை அணியில் இடம் பிடிப்பார் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

ஒருநாள் போட்டிகளில் ரன் குவிக்க போராடி வந்த சூர்யகுமார் யாதவ், நடந்து வரும் இந்தியா – ஆஸ்திரேலியா தொடரின் இரண்டு ஆட்டங்களிலும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். முதல் ஒருநாள் போட்டியில் தனது அரை சதத்தை அடித்து சிறப்பாகி விளையாடினார்.

தொடர்ந்து, இரண்டாவது ஒருநாள் போட்டியில், சூர்யகுமார் யாதவ் 10 ஓவர்கள் உள்ள நிலையில் களமிறங்கி T20-யில் விளையாடுவதுபோல சிறப்பாக பேட்டிங் செய்து, அந்த நேரத்திற்கு தனது அணிக்கு என்ன தேவையோ அதனை சிறப்பாக செய்தார்.

- Advertisement-

இரண்டாவது ஆட்டத்தின் மிக முக்கியமான கட்டத்தில் சிக்ஸர்கள் விளாசி சூரியகுமார் ரன்களை குவித்தார். ஆஸ்திரேலிய அணி வீரர் கேமரூன் கிரீனின் ஓவரில் தொடர்ந்து நான்கு பந்துகளில் நான்கு சிக்ஸர்களை விளாசியாது பலருக்கும் சிறப்பான ஒரு என்டர்டைன்மெண்டாக இருந்தது.

இந்நிலையில், சூர்யகுமார் யாதவின் சிறப்பான ஆட்டம் குறித்து முன்னாள் ஆஸ்திரேலிய அணி கேப்டன் மார்க் வாக் பாராட்டியுள்ளார். அவர் கூறியதாவது, “சூர்யகுமார் யாதவ் ஒரு தனித்துவமான ஆட்டக்காரராக இருக்கிறார். அவர் அடிக்கும் ஏரியாக்களில் பந்தை அடிக்கும் வீரரை நான் பார்த்ததே இல்லை. அதே போல பீல்டர்கள் இல்லாத இடத்தில் பந்தை அடிக்கக்கூடியவராக அவர் இருக்கிறார். அது என்ன அவ்வளவு கடினமா என்று தோன்றலாம். ஆனால் அதற்க்கு திறமை வேண்டும். அவர் எதிரணியின் பீல்டை சிறப்பாக கையாண்டு கேப்களை கண்டறிகிறார் என்று அவர் கூறியுள்ளார்.

சற்று முன்