Homeகிரிக்கெட்பும்ராலாம் இல்ல.. உ.கோ-யில் இவங்க தான் சரியான பவுலரா இருக்கப்போறாங்க.. நியூசி ஜாம்பவான் கருத்து

பும்ராலாம் இல்ல.. உ.கோ-யில் இவங்க தான் சரியான பவுலரா இருக்கப்போறாங்க.. நியூசி ஜாம்பவான் கருத்து

-Advertisement-

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இன்னும் சில நாட்களிலேயே தொடங்க உள்ளது. அதற்காக அனைத்து நாடுகளை சேர்ந்த வீரர்களும் இந்தியா வந்துவிட்டனர். அதேபோல் இந்திய ஆடுகளங்களுக்கும் சூழலுக்கும் மாறுவதற்காக பயிற்சி போட்டிகளில் பங்கேற்று வருகின்றனர். இந்த உலகக்கோப்பையை பொறுத்தவரை வேகப்பந்துவீச்சாளர்களின் ரோல் முக்கியமானதாக இருக்கும்.

ஏனென்றால் இந்திய ஆடுகளங்களில் வேகப்பந்துவீச்சாளர் பவர் பிளே ஓவர்களில் விக்கெட் வீழ்த்தவில்லை என்றால், சுழற்பந்துவீச்சாளர்களை பேட்ஸ்மேன்களால் எளிதாக அட்டாக் செய்ய முடியும். அந்த வகையில் ஒவ்வொரு அணியும் தரமான வேகப்பந்துவீச்சாளர்களுடன் உலகக்கோப்பை தொடரில் களமிறங்கியுள்ளது.

-Advertisement-

இந்த நிலையில் நியூசிலாந்து கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் பாண்ட் வேகப்பந்துவீச்சாளர்கள் குறித்து பேசும் போது, சர்வதேச கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணியின் மார்க் உட் தான் எனக்கு தனித்துவமான பந்துவீச்சாளராக தெரிகிறார். அவர் சிறந்த திறமைகளை வளர்த்து கொண்டுள்ளார். வெறும் வேகம் மட்டுமல்லாமல், பந்தை அவரால் நன்றாக திருப்ப முடிகிறது.

தற்போதைய சூழலில் ஃபெர்குசன் மற்றும் மார்க் உட் மட்டும் நல்ல வேகத்தில் வீசி வருகிறார்காள். அதேபோல் பாகிஸ்தான் அணியின் ஷாகின் அப்ரிடியால் ஒட்டுமொத்தமாக ஆட்டத்தை அந்த அணி பக்கம் திருப்பும் திறமையை கொண்டுள்ளார். எப்போதும் ஷாகின் அப்ரிடியின் பந்துவீச்சை பார்ப்பது மகிழ்ச்சியாக இருக்கும்.

-Advertisement-

ஒருமுறை நியூசிலாந்து ஏ அணியை அழைத்து ஐக்கிய அரபு அமீரகத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான விளையாடினேன். அப்போது ஷாகின் அப்ரிடிக்கு வெறும் 19 வயது தான். அப்போதே அவ்வளவு திறமைகளை கொண்டிருந்தார். பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் பந்துவீசும் போது ஆட்டத்தில் என்னவோ நடக்கும் என்ற பரபரப்பு இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

அதேபோல் ஆஸ்திரேலிய அணியின் மிட்செல் ஸ்டார்க், இந்திய அணியின் முகமது சிராஜ், தென்னாப்பிரிக்கா அணியின் ரபாடா ஆகியோரும் நல்ல வேகத்தில் வீசக் கூடிய பவுலர்களாக உள்ளனர். இதனால் இந்த உலகக்கோப்பை தொடரில் யார் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றுவார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

-Advertisement-

சற்று முன்