- Advertisement -
Homeவிளையாட்டு10 பாலில் 58 ரன்... 172 சொச்சம் ஸ்ட்ரைக் ரேட்.. பட்டதெல்லாம் பாக்கியம்... கப்தில் காட்டிய...

10 பாலில் 58 ரன்… 172 சொச்சம் ஸ்ட்ரைக் ரேட்.. பட்டதெல்லாம் பாக்கியம்… கப்தில் காட்டிய படம்… திணறிப்போய் நின்ற பவுலர்கள்..

- Advertisement-

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் அதிரடி தொடக்க வீரர் மார்டின் கப்தில், டி20 ஸ்பெஷலிஸ்ட் பேட்டர். பல்வேறு நாடுகளில் நடைபெறும் டி20 லீக் போட்டியில் அவர் விளையாடிவருகிறார். நீண்ட நாட்களாக சற்று ஃபார்ம் அவுட்டில் இருக்கும் மார்டின் கப்தில், தற்போது சிபிஎல்லில் அதிரடி சதம் அடித்து கம்பேக் தந்துள்ளார்.

வெஸ்ட் இண்டீஸில் கரீபியன் ப்ரிமியர் லீக் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி, பார்பேடோஸ் ராயல்ஸ் அணிக்கு இடையேயான போட்டி பார்பேடோஸில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியில் கப்தில் தொடக்க வீரராக களமிறங்கினார்.

மறுமுனையில் மார்க் தியால், பூரான் என அடுத்தடுத்து ஆட்டமிழந்தாலும், பொல்லார்ட் உடன் ஜோடி சேர்ந்து கப்தில் பொறுப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினார். 14வது ஓவரின் முதல் பந்தில் அரை சதம் கடந்தார். அதுவரை சிங்கில்ஸ், டபுள்ஸ் எடுத்தவந்த அவர், அதன் பின் தனது ஆட்டத்தை சிக்சர் மோடுக்கு மாற்றினார்.

எப்படி பந்துவீசினாலும் பந்தை சிக்சருக்கு பறக்கவிட்டார். இதன் பலனாக கடைசி ஓவரின் நான்காவது பந்தில் சதத்தை பதிவு செய்தார். சிபிஎல்லில் அவர் பதிவு செய்யும் முதல் சதம் இதுவாகும். வெறும் ஒரு 4 மட்டும் அடித்து, 9 சி்க்சர்களை விளாசியது தான், இவரது ஆட்டத்தின் ஹைலேட். இவர் அடித்த சிக்ஸர் மற்றும் பவுண்டரிகளை மட்டும் கணக்கிட்டு பார்த்தால் 10 பந்துகளில் 58 ரன்களை விளாசி உள்ளார்.

- Advertisement-

முதல் 40 பந்துகளில் 51 ரன்களை எடுத்த அவர், அடுத்த 18 பந்துகளில் 49 ரன்களை அடித்தார். இதனால் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி 194 ரன்களை குவித்தது. இதைதொடர்ந்து களமிறங்கிய பார்பேடோஸ் ராயல்ஸ் அணி, டிரின்பாகோ நைட் ரைடரஸ் அணியின் பந்துவீ்ச்சை எதிர்கொள்ள முடியாமல் 61 ரன்களுக்கு சுருண்டது. இதனால் டிரின்பாகோ நைட் ரைடரஸ் அணி 133 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.

தனது அதிரடி ஆட்டத்தால் மார்டின் கப்தில் மீண்டும் கம்பேக் தந்துள்ளார். இவரது பேட்டிங் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. ஒரு வருடத்துக்கு மேலாக நியூசிலாந்து அணியில் இடம்பிடிக்காத அவர், விரைவில் அணியில் நிச்சயம் இடம்பெறுவேன் என கப்தில் கூறியிருந்தார். உலககோப்பை தொடரில் ஒரு போட்டியில் அதிக ரன்களை விளாசிய வீரர் என்ற சாதனை பட்டியலில் 237 ரன்களுடன் கப்தில் முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்