- Advertisement 3-
Homeவிளையாட்டுஅடேங்கப்பா.. 2007, 2024 டி20 உலக கோப்பை ஃபைனல் நடுவே.. இவ்ளோ ஒற்றுமையான விஷயம் இருக்கா.....

அடேங்கப்பா.. 2007, 2024 டி20 உலக கோப்பை ஃபைனல் நடுவே.. இவ்ளோ ஒற்றுமையான விஷயம் இருக்கா.. மிரண்ட ரசிகர்கள்

- Advertisement 1-

இந்திய அணி 17 ஆண்டுகள் கழித்து டி20 உலக கோப்பைத் தொடரை வென்றுள்ள நிலையில் 2007 ஆம் ஆண்டு தோனி வென்றதற்கும், 2024 ஆம் ஆண்டு ரோஹித் வென்றதற்கும் இடையே உள்ள அதிரடியான ஒற்றுமை பலரையும் மிரள வைத்துள்ளது. 2007 ஆம் ஆண்டு இந்திய அணி உலக கோப்பையின் லீக் சுற்றில் வெளியேறிய அதிர்ச்சியுடன் இருந்த சமயத்தில் தான் டி20 உலக கோப்பை தொடரும் அடுத்து சில மாதங்களில் ஆரம்பமாக இருந்தது.

இதில் தோனி தலைமையில் இளம் இந்திய வீரர்கள் தென்ஆப்பிரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டிருந்தது. ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட பல அணிகளை வீழ்த்தி பாகிஸ்தானையும் இறுதி போட்டியில் சந்தித்திருந்தனர். இந்த போட்டியிலும் இந்திய அணி கடைசி கட்டத்தில் தோல்வியின் பிடியில் இருந்த சமயத்தில் தான் பந்துவீச்சாளர்கள், ஃபீல்டர்கள் அதனை மாற்றி இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.

தோனியின் தலைமையும் அந்த சமயத்தில் பெரிதாக கொண்டாடப்பட அதன் பின்னர் தற்போது ரோஹித் ஷர்மா தலைமையில் இந்திய அணி டி 20 கோப்பையை வென்றுள்ளது. தற்போதும் கூட இந்திய அணியின் கையில் போட்டியில்லாமல் போக, கடைசி கட்டத்தில் பந்து வீச்சாளர்கள் மாயாஜாலம் நிகழ்த்தி இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெறவும் உதவி செய்தனர்.

தோனிக்கு பிறகு டி20 உலக கோப்பை வென்ற இந்திய கேப்டன் என்ற பெருமையும் தற்போது ரோஹித் வசம் மாறியுள்ள நிலையில் இன்னும் பல சாதனைகளையும் அவர் இந்த தொடரில் குவித்து தள்ளியுள்ளார். அப்படி இருக்கையில் தான் இந்த இரண்டு உலகக் கோப்பைகளுக்கும் உள்ள சில ஒற்றுமையான விஷயங்கள் பலரையும் ஒரு நிமிடம் அசர வைத்துள்ளது.

- Advertisement 2-

இந்த இரண்டு போட்டியிலும் இந்திய அணியின் தொடக்க வீரர் தான் அதிக ரன் அடித்திருந்தார் (கம்பீர் & கோலி). அதேபோல இரண்டு போட்டிகளிலும் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 13 ஓவர்கள் முடிவில் 98 ரன்கள் சேர்த்திருந்தது. மேலும் இந்திய அணியை இந்த இரண்டு உலக கோப்பையின் இறுதி போட்டியிலும் எதிர்த்து ஆடி இருந்த பாகிஸ்தான் மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய அணிகள் தங்கள் பேட்டிங் செய்தபோது முதல் 10 ஓவரில் இந்தியாவை விட முன்னிலையில் தான் இருந்தது.

இதேபோல 2007 ஆம் ஆண்டு இந்திய அணி தரப்பில் ஒரு ஓவரில் அதிக ரன்கள் கொடுத்தது சுழற்பந்து வீச்சாளர் தான் (ஹர்பஜன்சிங்). அவர் ஒரே ஓவரில் 19 ரன்கள் கொடுக்க, இந்த முறை சுழற்பந்து வீச்சாளர் அக்சர் படேல் ஒரே ஓவரில் 24 ரன்கள் கொடுத்திருந்தார். இவர்களைப் போலவே இந்த இரண்டு உலக கோப்பையிலும் அதிக அனுபவம் இல்லாத வேகப்பந்து வீச்சாளர் ஒரே மாதிரி பங்களிப்பை அளித்திருந்தனர்.

ஜோகிந்தர் ஷர்மா இரண்டு விக்கெட் எடுத்து 12 டாட் பால்கள் போட, அர்ஷ்தீப் சிங் இந்த முறை இரண்டு விக்கெட்டுகள் எடுத்து 12 டாட்பால்களை வீசியிருந்தார். இந்த இரண்டு உலக கோப்பையிலும் இந்திய அணி தலா 8 சிக்ஸர்கள் கொடுக்க, கடைசி ஐந்து ஓவர்களில் இரண்டு முறையும் 4 விக்கெட்டுகளை அவர்கள் வீழ்த்தி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இதே போல, மற்றொரு சுவாரஸ்யமாக இந்தியாவை எதிர்த்து ஆடியிருந்த இரண்டு அணிகளின் கடைசி விக்கெட்டும் கேட்ச்சாக தான் மாறி இருந்தது.

சற்று முன்