- Advertisement 3-
Homeவிளையாட்டுரோஹித், கோலி ஓய்வு அறிவிச்சது இதுக்காக தானா.. உருக்கமான முடிவுக்கு பின் இருந்த அதிரடி காரணம்..

ரோஹித், கோலி ஓய்வு அறிவிச்சது இதுக்காக தானா.. உருக்கமான முடிவுக்கு பின் இருந்த அதிரடி காரணம்..

- Advertisement 1-

ரோஹித் ஷர்மா, விராட் கோலி ஆகியோர் டி20 உலக கோப்பைத் தொடரில் இருந்து ஓய்வு பெற்றதால் ரசிகர்கள் கலங்கிப் போனாலும் அடுத்து கிரிக்கெட் அரங்கில் நடக்கப் போகும் முக்கியமான சம்பவம் ஒன்றை பற்றி தற்போது பார்க்கலாம். டி20 உலக கோப்பைத் தொடருக்கு சில மாதங்கள் முன்பாக இந்திய அணி ஆடியிருந்த இருதரப்பு டி20 தொடர் சிலவற்றில் ரோஹித் மற்றும் கோலி ஆகிய இரண்டு பேரும் ஆடவில்லை.

இதனால், அவர்கள் டி20 உலக கோப்பைத் தொடரில் இடம்பெறமாட்டார்கள் என்றும் ஹர்திக் பாண்டியா தான் இந்திய அணியை வழிநடத்த போகிறார் என்றும் பரபரப்பான கருத்துக்களும் வெளியாகி வந்தது. இதனிடையே, ரோஹித்திற்கு ஐபிஎல் தொடர் சிறப்பானதாக பேட்டிங்கில் அமையவில்லை. கோலி சிறப்பாக ஆடியிருந்தும் ஆர்சிபி அணி தோல்வி அடைய, அவர்களை சுற்றி விமர்சனங்கள் தான் அதிகமாக இருந்து வந்தது.

இதனால், வயதை காரணமாக சொல்லி ரோஹித் மற்றும் கோலி இருவரும் டி20 உலக கோப்பைத் தொடரில் இருந்து ஒதுங்கி இளம் வீரர்களுக்கு வழிவிடுவது தான் சிறப்பாக இருக்கும் என கிரிக்கெட் பிரபலங்களே தெரிவிக்கத் தொடங்கி விட்டனர். இதற்கு மத்தியில், டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி, ரோஹித் தலைமையில் அறிவிக்கப்பட, மீண்டும் விமர்சனங்கள் எழுந்தது.

ஆனால், தனது தலைமையில் சிறப்பாக இந்திய அணியை வழிநடத்தி வந்த ரோஹித் ஷர்மா, ஐசிசி தொடரின் இறுதி போட்டியில் 3 வது முறையாக இந்திய அணியை தொடர்ச்சியாக வழிநடத்தி இருந்தார். ஆனால், கடந்த இரண்டு முறை தவறிப் போன கோப்பையை இந்த முறை சொந்தமாக்கி விட வேண்டும் என்பதில் குறிக்கோளாக இருந்தனர் இந்திய வீரர்கள்.

- Advertisement 2-

7 போட்டிகளில் சேர்த்து 75 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த கோலி, கடைசி போட்டியில் இந்தியாவுக்காக தனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி 76 ரன்கள் சேர்த்திருந்தார். 177 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய தென்னாபிரிக்க அணி, வெற்றியை நெருங்கிய போது பும்ரா மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் அப்படியே முடிவை தலைகீழாக மாற்றி இருந்தனர்.

இதனால், கடைசி ஓவரில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று, 11 ஆண்டுகளாக ஐசிசி கோப்பை தாகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது இந்திய அணி. ரோஹித் அரையிறுதி போட்டியில் சிறப்பாக பேட்டிங் செய்ய, கோலி இறுதி போட்டியில் நன்றாக ஆடி தங்களின் தேவை டி20 உலக கோப்பைக்கு முக்கியம் என்பதையும் உறுதி செய்திருந்தனர்.

இதனிடையே, கோலி டி20 சர்வதேச போட்டிகளில் இருந்து தனது ஓய்வினை அறிவிக்க, அவரைத் தொடர்ந்து கேப்டன் ரோஹித்தும் அதே உருக்கமான முடிவை எடுத்துள்ளார். ஓய்வை அறிவிக்க இதை விட சிறந்த தருணம் அமையாது என்றும் அவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.

அவர்கள் இருவரும் எடுத்த இந்த முடிவு எமோஷனலாக இருந்தாலும் அதே நிலையில் மற்றொரு விஷயத்தை நாம் கவனிக்க வேண்டியுள்ளது. ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் மட்டும் ரோஹித், கோலி ஆகியோர் இன்னும் கவனம் செலுத்த தொடங்கும் போது அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை இந்திய அணி வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. இதுவரை நடந்து முடிந்த இரண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிலும் இந்திய அணி இறுதி போட்டியில் தோல்வியடைந்திருந்தது.

ஒரு நாள் உலக கோப்பை, ஒரு பக்கம் காத்திருப்பில் இருந்தாலும் அதைவிட முக்கியமாக ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பையும் இந்திய அணி கைப்பற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. கோலி, ரோகித் தற்போது டி20 உலக கோப்பையை எப்படி வென்று கொடுத்தார்களோ, அதே போல அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கும் முன்னேறி, அவர்கள் நிச்சயம் வரலாறு படைக்க உள்ளது என்ற நம்பிக்கையிலும் ரசிகர்கள் காத்திருந்து வருகின்றனர்,

சற்று முன்