- Advertisement -
Homeவிளையாட்டுபதிரனாவோடு கைகோர்த்து களமிறங்க போகும் பிராவோ. தோனியின் செல்லப் பிள்ளையால் களைகட்டும் டி20 லீக் தொடர்.

பதிரனாவோடு கைகோர்த்து களமிறங்க போகும் பிராவோ. தோனியின் செல்லப் பிள்ளையால் களைகட்டும் டி20 லீக் தொடர்.

- Advertisement-

இந்தியாவில் ஆண்டுதோறும் ஐபிஎல் தொடர் நடைபெற்று வருவது போன்று உலகெங்கிலும் டி20 லீக் தொடரானது நடைபெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் நடைபெற்று வரும் கரீபியன் லீக் தொடரானது ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பினை பெற்றுள்ளது. ஏனெனில் வெஸ்ட் இண்டீஸில் நடைபெறும் இந்த டி20 லீக் போட்டிகளில் பல்வேறு அதிரடி வீரர்களும், சிறப்பான பந்துவீச்சாளர்களும் கலந்து கொள்வதால் ஒவ்வொரு ஆண்டும் இந்த தொடரானது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.

அந்த வகையில் இந்த ஆண்டு நடைபெற இருக்கும் கரீபியன் லீக் டி20 தொடருக்கான ஏலம் நேற்று ஜூன் 30-ஆம் தேதி நடைபெற்றது. இந்த ஆண்டு ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் நடைபெற இருக்கும் இந்த கரீபியன் டி20 லீக் தொடரில் உலகெங்கிலும் இருந்து ஏராளமான சர்வதேச வீரர்கள் கலந்து கொள்கிறார்கள்.

அதன்படி இந்த வருடத்திற்கான கரீபியன் லீக் தொடரானது ஆகஸ்ட் 16-ஆம் தேதி முதல் செப்டம்பர் 24-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த தொடரில் மொத்தம் ஆறு அணிகள் பங்கேற்று விளையாட இருக்கும் வேளையில் ட்ரின்பாங்கோ நைட் ரைடர்ஸ் அணியும் இந்த தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற முடிந்த இந்த கரீபியின் டி20 லீக் தொடருக்கான ஏலத்தில் பல்வேறு சர்வதேச வீரர்களும் கலந்து கொண்ட வேளையில் இந்த ஆண்டு நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக மிகச் சிறப்பாக பந்துவீசிய மதீஷா பதிரானாவை டிரின்பாங்கோ நைட் ரைடர்ஸ் அணி தேர்வு செய்துள்ளது.

- Advertisement-

கைரன் பொல்லார்டு தலைமையிலான இந்த அணியில் சென்னை அணியின் பந்துவீச்சு பயிற்சியாளரான டுவைன் பிராவோவும் விளையாடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஐபிஎல் போட்டிகளின் போது பந்துவீச்சு பயிற்சியாளராக இருக்கும் அவருடன் இணைந்து தற்போது மதிஷா பதிரானாவும் களமிறங்க உள்ளது அனைவரது மத்தியிலும் ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவில் நடைபெற்று முடிந்து ஐ.பி.எல் தொடரில் 14 போட்டிகளில் விளையாடிய பதிரானா 21 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அதிலும் குறிப்பாக டெத் ஓவர்களில் இவர் வீசிய பந்துவீச்சை அவ்வளவு எளிதாக யாராலும் மறக்கமுடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்