பதிரனாவுக்கு வந்த கியூட் ப்ரோபோசல். அவரை இந்திய அணியில் ஆட வைக்க இளம் பெண் சொன்ன சூப்பர் திட்டம். பெரிய தலைங்க எல்லாம் இத நோட் பண்ணிக்கோங்கப்பா..

- Advertisement -

ஒவ்வொரு ஐபிஎல் சீசனிலும் ஒரு இளம் வீரர் பேட்டிங்கில் அல்லது பவுலிங்கில் கலக்கி புகழ் வெளிச்சத்துக்கு வருவார். அப்படி இந்த சீசனில் வெளிச்சத்திற்கு வந்தவர்களில் ஒருவர் தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இளம் பந்துவீச்சாளர் குட்டி மலிங்கா என அழைக்கப்படும் மதீஷா பதிரனா. அவர் தன்னைப் பற்றி ரசிகர்கள் முதல் முன்னாள் இன்னாள் வீரர்கள் வரை பேசவைத்துள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனியே பதிரனா பற்றி புகழ்ந்து பேசியது கவனம் ஈர்த்துள்ளது. பதிரனா பற்றி பேசிய தோனி “எதிர்காலத்தில் பதிரனா இலங்கை அணியின் சொத்தாக இருப்பார். ஆனால் அவரை ஒருநாள் மற்றும் டி 20 போட்டிகளில் அதிகமாக விளையாட வைக்கக் கூடாது. அந்த வடிவத்தில் அவர் விளையாடினால் நீண்டகாலம் அவரால் சிறப்பாக விளையாட முடியாது” எனக் கூறியிருந்தார்.

- Advertisement -

தோனியின் இந்த அவதானிப்பை இலங்கை முன்னாள் வீரர் லசித் மலிங்கா மறுத்துள்ளார். அவர் டெஸ்ட் போட்டிகளில் விளையாடினால்தான் அவரது ஃபார்மைக் கண்டறிய முடியும் எனக் கூறி இருந்தார். ஆனால் மற்றொரு முன்னாள் வீரரான சமீந்த வாஸ் தோனியின் கருத்து சரிதான் எனக் கூறி இருந்தார்.

எது எப்படியோ பதிரனா இந்த சீசனில் அனைவராலும் கவனிக்கப்படும் வீரராகியுள்ளார். இந்நிலையில் பதிரனா இந்திய அணிக்காக விளையாடினால் சிறப்பாக இருக்கும் எனக் கூறியுள்ளார் ஒரு பெண். அதுமட்டுமில்லாமல் அதற்கான வழி ஒன்றையும் அவர் கூறியுள்ளார். ரோஹினி ஸ்ரீதரன் என்ற அந்த பெண் சொன்ன ஐடியா இது தான்.

- Advertisement -

”பதிரனாவ என்ன மாதிரி ஒரு இந்திய பெண்ணை கல்யாணம் பண்ணிகிட்டா, பதிரனா இந்தியாவுக்கு குடிபெயர்ந்துட்டா,  அவருக்கு இந்திய குடியுரிமை வாங்கிட்டா… அவர் இந்திய டீமுக்கு ஆடுலாம்ல” எனக் கூறியுள்ளார். இந்த ட்வீட் இப்போது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகிவருகிறது.

இதையும் படிக்கலாமே: கோலியிடம் மன்னிப்பு கேட்டாரா நவீன் உல் ஹக்? வைரலாகும் ட்வீட். உண்மை என்ன? ஒரு அலசல்

இங்கிலாந்து அணியில் இதுபோல வெளிநாட்டு வீரர்கள் இங்கிலாந்து குடியுரிமை வாங்கி அந்த நாட்டு அணிக்காக விளையாடி வருகின்றனர். ஆனால் இந்தியா போன்ற 130 கோடி மக்கள் தொகை உள்ள நாட்டில் கிரிக்கெட்டை மதம் போல தீவிரமாக நேசிக்கும் இளைஞர்கள் நிறைந்த நாட்டில் இதற்கு வாய்ப்பு இருக்கிறதா என்றால் சந்தேகம்தான்.

- Advertisement -

சற்று முன்