- Advertisement -
Homeவிளையாட்டுலங்கா பிரீமியர் லீக்கில் மதீஷா பதிரனா யார் தலைமையின் கீழ் விளையாட போறார் தெரியுமா? இவருக்கு...

லங்கா பிரீமியர் லீக்கில் மதீஷா பதிரனா யார் தலைமையின் கீழ் விளையாட போறார் தெரியுமா? இவருக்கு எங்கயோ மச்சம் இருக்கு பாஸ். எப்போவுமே இவருக்கு ஒரு சிறப்பான தலைமை தான் அமையுது.

- Advertisement-

ரசிகர்கள் பலர் ஆவலுடன் எதிர்பார்த்த லங்கா பிரீமியர் லீக் போட்டிக்கான ஏலம் நேற்று நடைபெற்றது. இந்த ஏலத்தில் கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ், தம்புள்ளை ஆரா, ஜப்னா கிங்ஸ், பி-லவ் கண்டி, கல்லி டைட்டன்ஸ் இப்படியாக மொத்தம் ஐந்து அணிகள் கலந்துகொண்டன. இந்த ஏலத்தில் மொத்தம் 360 வீரர்கள் பதிவு செய்திருந்தனர். வரும் ஜூலை 31 ஆம் தேதி முதல் போட்டிகள் தொடங்கி, ஆகஸ்ட் 22 அன்று போட்டிகள் முடிகிறது.

இந்த ஏலத்தை பொறுத்தவரை தில்ஷான் மதுஷங்க தான் அதிக தொகைக்கு ஏலம் போன வீரராக உள்ளார். அவர் 92,000 அமரிக்க டாலருக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார். ஏலத்தில் இந்திய வீரரான சுரேஷ் ரைனாவின் பெயர் இடம் பெற்று இருந்தது. அவருடைய ஆரம்ப விலை 50,000 அமெரிக்க டாலராக இருந்தது. ஆனால் ஏலத்தில் அவர் கலந்து கொள்ளவில்லை. சிலர் அவர் ஏலத்திற்கு ரிஜிஸ்டர் செய்யவே இல்லை என்றும், சிலர் அவர் ரெஜிஸ்டர் செய்து பின்வாங்கி விட்டார் என்றும் கூறுகின்றனர். ஆனால் இது குறித்து சுரேஷ் ரெய்னா தற்போது வரை எந்த தகவலையும் கூறவில்லை.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி தோனியின் செல்லப்பிள்ளை என்று பெயர் பெற்ற மதீஷா பதிரனா, லங்கா பிரீமியர் லீக்கை பொறுத்தவரை ஒரு ப்ரீ செலக்டட் பிளேயர் என்பது குறிப்பிடத்தக்கது. சிஎஸ்கே வின் பௌளரான இவரை தோனி அருமையாக மெருகேற்றி உள்ளார். பல நெளிவு சுழிவுகளை அவருக்கு சிஎஸ்கே அணி கற்றுக் கொடுத்து உள்ளது என்றால் அது மிகையாகாது.

சென்னை ரசிகர்களை பொறுத்தவரையில் பதிரனாவை அவர்கள் தங்கள் சொந்த நாட்டு வீரர் போல கருதுகின்றனர். அவருக்காகவே பெருமளவு ரசிகர் கூட்டமும் உருவாகியுள்ளது என்றால் அது மிகையாகாது. லங்கா பிரீமியர் லீகில் பதிரனா, கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் அணியில் விளையாட உள்ளார். அந்த அணியின் கேப்டனாக பாபர் அசாம் இருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement-

மதீஷா பதிரனாவுக்கு எப்படி ரசிகர் கூட்டம் உள்ளதோ அதேபோல் பாபர் அசாமுக்கும் உலகெங்கும் ரசிகர் கூட்டங்கள் உள்ளன. பாகிஸ்தான் அணியை அவர் சிறப்பாக வழிநடத்தி தன்னுடைய பேட்டிங்கையும் சிறப்பான முறையில் மிருகேற்றி வருகிறார். பாபர் அசாம் தலைமையில் பாகிஸ்தான் அணி விளையாடி பல்வேறு போட்டிகளில் வென்று நல்ல ஒரு நிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

2023 ஐபிஎல் இல் மதீஷா பதிரனாவை சென்னை அணி 20 லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்திருந்தது. தற்போது நடைபெறவுள்ள லங்கா பிரீமியர் லீக்கை பொறுத்தவரை அவர் ப்ரீ செலக்டட் பிளேயராக இருப்பதால் அவருக்கான தொகை இதில் எவ்வளவு என்பது தெரியவில்லை. ஐபிஎல் இல் பத்திரமாவுக்கு தோனி கிடைத்தது போல் LPL -ல் அவருக்கு பாபர் அசாம் கிடைத்துள்ளார். இதனால் அவருக்கு எப்பொழுதும் ஒரு சிறப்பான தலைமை அமைகிறது, அவர் ஓர் அதிர்ஷ்டமிக்க வீரர் என்று அவரது ரசிகர்கள் தங்களது கருத்துக்களை கூறி வருகின்றனர்.

சற்று முன்