- Advertisement -
Homeவிளையாட்டுஐபிஎல் முடிந்த கையோடு பதிரானவுக்கு அடித்த ஜாக்பாட். எல்லாம் சிஎஸ்கேல விளையாடின நேரம் தான் என...

ஐபிஎல் முடிந்த கையோடு பதிரானவுக்கு அடித்த ஜாக்பாட். எல்லாம் சிஎஸ்கேல விளையாடின நேரம் தான் என கூறும் சிஎஸ்கே ரசிகர்கள்.

- Advertisement-

பேபி மலிங்கா என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் மதீஷா பத்திரனா, ஐபிஎல்-இல் சிஎஸ்கே-விற்காக விளையாடி ரசிகர்களின் பேராதரவை பெற்றுள்ளார். இவரது பௌலிங் ஸ்டைல் அப்படியே மலிங்காவை போல இருப்பதால் பேட்ஸ்மேன்கள் இவரது பந்துகளை எதிர்கொள்ள சற்று தடுமாறுகிறார்கள் என்றே கூறலாம்.

பத்திரனா சிஎஸ்கேவின் செல்லப்பிள்ளை என்று கூறும் அளவிற்கு அவர் ரசிகர்களின் நெஞ்சிலும், தல தோனியின் நெஞ்சிலும் இடம் பிடித்துவிட்டார். இந்த ஐபிஎல்-இல் டெத் ஓவர் ஸ்பெசலிஸ்ட்டாக அவர் மாறி உள்ளார். அவர் இந்த சீசனில் 19 விக்கெட்களை வீழ்த்தி இருப்பது குறிப்பிடத்தக்கது. அதே சமயம் தோனியே, பதிரனாவை பற்றி கவலை வேண்டாம் ஒன்றும் இல்லை என்று பதிரனாவின் சகோதரியிடம் கூறி இருந்தது குறிப்பிட தக்கது.

இந்த நிலையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இலங்கை அணி மூன்று ஒருநாள் போட்டிகளை விளையாட உள்ளது. அதில் இரண்டு போட்டிகளுக்கான ஸ்குவாட்டை இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. 16 வீரர்கள் அடங்கிய அந்த ஸ்குவாட்டில் பத்திரனாவின் பெயர் இடம்பெற்றுள்ளது. இதன் மூலம் தனது முதல் ODI-ஐ இலங்கைக்காக விளையாட உள்ளார் பத்திரனா.

இந்த தொடரானது ஜூன் 2ஆம் தேதி ஆரமிக்க உள்ளது. 20 வயதான பத்திரனா தனது முதல் டி20 போட்டியை ஆகஸ்ட் 2022ல் ஆடினார். அந்த பிறகு கிட்டத்தட்ட 10 மாதங்களில் ஒரு நாள் போட்டியில் அறிமுகமாக உள்ளார். ஜிம்பாப்வேயில் ஜூன் 18 ஆம் தேதி தொடங்கும் உலகக் கோப்பை தகுதிச் சுற்றுக்கான ஒரு ஒத்திகையாக இது இருக்கும் என்று கூறப்படுகிறது.

- Advertisement-

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இந்த தொடரில் வீரர்களின் செயல்பாடுகளை உன்னிப்பாக கவனித்து அதற்கு ஏற்றவாறு உலகக்கோப்பைக்கான இலங்கை அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவிக்க உள்ளதாக கூறப்டுகிறது. எப்படியும் பத்திரனா இதில் அசத்துவார். ஆகையால் அவர் நிச்சயம் உலகக்கோப்பைக்கான ஸ்குவாடிலும் இடம் பிடிப்பார் என்பது பத்திரனா ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. அதே சமயம் அவர் சிஎஸ்கே-வில் விளையாடிய காரணத்தால் தான் அவரின் திறமை முழுமையாக வெளிப்பட்டது. இப்போது அவரின் இந்த வளர்ச்சிக்கு சிஎஸ்கேவில் விளையாடியது தான் காரணாம் என சிஎஸ்கே ரசிகர்கள் கூறிவருகின்றனர்.

இதையும் படிக்கலாமே: வீடியோ: வெற்றிக்கு பிறகு சிஎஸ்கே அணியின் சிறப்பான கொண்டாட்டம். கேப்டன் தோனி வெட்டிய ஸ்பெஷல் கேக்

இலங்கை அணியின் முதல் இரண்டு ஒரு நாள் போட்டிக்கான ஸ்குவாட்
தசுன் ஷனகா (கேப்டன்), குசல் மெண்டிஸ், பதும் நிசங்க, திமுத் கருணாரத்ன, சதீர சமரவிக்ரம, அஞ்செலோ மத்தியூஸ், தனஞ்சய டி சில்வா, சரித் அசலன்க, வனிது ஹசரங்கா, மகேஷ் தீக்ஷனா, துஷன் ஹேமந்த, சமிக கருணாரத்னே, துஷ்மந்த சமீரா, மதீஷா பத்திரனா, லஹிரு குமார, கசுன் ராஜித

சற்று முன்