- Advertisement 3-
Homeவிளையாட்டுஇனி சிஎஸ்கேகிட்ட நடக்காது.. கோலியின் பேட்டிங்கை காலி செய்ய தோனி போட்ட பிளான்..

இனி சிஎஸ்கேகிட்ட நடக்காது.. கோலியின் பேட்டிங்கை காலி செய்ய தோனி போட்ட பிளான்..

- Advertisement 1-

அனைத்து அணிகளிலும் இணைந்து ஆடும் வீரர்கள் ஐபிஎல் தொடர் வந்து விட்டால் பிரிந்து விட்டு தங்கள் அணிக்காக ஆதரவை பெற விரும்புவதுடன் அந்த அணி வெற்றி பெறவும் முயற்சி செய்வார்கள். அதிலும் இந்திய அணியில் ஒன்றாக ஆடி வரும் விராட் கோலி, ரோஹித் சர்மா, பும்ரா, கே எல் ராகுல் உள்ளிட்ட பல வீரர்கள் வெவ்வேறு அணிகளுக்காக ஆடும் போது அதை ரசிகர்கள் கூட்டமும் ஏதோ இரு சர்வதேச அணிகள் மோதுவது போன்ற விறுவிறுப்பையும் அதிகப்படுத்துவார்கள்.

இதே போன்று தான் மற்ற வெளிநாட்டு அணிகளில் உள்ள வீரர்களும் சென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களூர், மும்பை இந்தியன்ஸ் என பல அணிகளுக்காக ஆடி வருகிறார்கள். இப்படி சர்வதேச அணிகள் கலவையாக ஆடி வருவது ஐபிஎல் தொடரின் சிறப்பம்சமாக பார்க்கப்படும் நிலையில் அதை மைதானத்திற்கு கூடி இருக்கும் ரசிகர்களும் அதிக உற்சாகமாக மாற்றுகிறார்கள்.

இதற்கிடையில் 17வது ஐபிஎல் சீசனின் முதல் போட்டியானது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மார்ச் 22 ஆம் தேதி அன்று நடைபெற உள்ளது. தோனி தலைமையிலான சென்னை அணியும், பாப் டு பிளெஸ்ஸிஸ் தலைமையிலான பெங்களூர் அணியும் முதல் போட்டியில் மோத உள்ளதால் பலம் வாய்ந்த இரு அணிகளுக்கு இடையிலான போட்டி என்பதால் நிச்சயம் திருவிழா போல களைக்கட்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அதிலும் பெங்களூர் அணியில் பாப் டு பிளெஸ்ஸிஸ், மேக்ஸ்வெல், கோலி உள்ளிட்ட வீரர்களும் சிஎஸ்கேவில் தோனி, ஜடேஜா போன்ற வீரர்களும் இருப்பதால் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை கடைசி நிமிடம் வரையும் கணிக்க முடியாது என்று தான் தெரிகிறது.

- Advertisement 2-

பல அதிரடி வீரர்கள் பெங்களூர் அணியில் இருந்தாலும் சேப்பாக்கம் போன்ற மைதானத்தில் அவர்கள் ரன் குவிப்பது கடினமாகவே இருக்கும் என்றுதான் பலரும் குறிப்பிட்டு வருகின்றனர். அந்த வகையில் சிஎஸ்கே அணிக்கு எதிராக சிறப்பாக ரன்கள் குவித்துள்ள கோலி, சேப்பாக்கம் மைதானத்தில் மிகக் குறைந்த ஸ்ட்ரைக் ரேட் தான் வைத்துள்ளார். இந்த நிலையில் இது பற்றி சிஎஸ்கே மற்றும் ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் ஹைடன் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

“சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மிக அபாரமான ஆட்டத்தை தான் விராட் கோலி வெளிப்படுத்தி வருகிறார். ஆனால் 2021 ஆம் ஆண்டு முதல் பவர் பிளேயிலேயே தோனி வேறொரு சில திட்டங்களை வகுத்து விராட் கோலியையும் அவுட் எடுத்து வருகிறார். ஆனால் கடந்த ஆண்டிலிருந்து விராட் கோலி நல்ல ஃபார்மில் இருப்பதால் நிச்சயம் போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.

சேப்பாக்கத்தில் அவர் சராசரி 30-ம் ஸ்டிரைக் ரேட் 111-ம் தான் இருக்கின்றது. இதனால் சேப்பாக்கம் மைதானத்தில் விராட்டின் ஒட்டுமொத்த ஃபர்பாமெர்ன்ஸ் குறைவாக இருக்கின்றது என்று தான் சொல்ல வேண்டும். சேப்பாக்கம் மைதானத்தில் தொடக்க வீரராக களம் இறங்கி ரன் சேர்ப்பது சவாலான விஷயம் தான்” என ஹைடன் தெரிவித்துள்ளார்.

சற்று முன்