திலக் வர்மாவை சேர்த்ததால இந்த வீரருக்கு பெரும் பிரச்சனை தான்.. முதல்ல நிரந்தரமா ஒரு அணி இருக்கனும்… இந்திய அணி குறித்து மேத்யூ ஹைடன் விமர்சனம்

- Advertisement -

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான 17 வீரர்கள் கொண்ட இந்திய அணியானது நேற்று பிசிசிஐ-யின் மூலம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த ஆசியக் கோப்பை தொடருக்கான இந்திய அணி தேர்வு தற்போது அனைவரது மத்தியிலும் பேசப்படும் விடயமாக இருந்து வருகிறது. ஏனெனில் இந்த அணித்தேர்வில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அதிலும் குறிப்பாக ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் கே.எல் ராகுல் ஆகியோரின் வருகை இந்திய அணிக்கு பலம் சேர்த்துள்ளது.

KL Rahul 2

அதோடு 20 வயதான திலக் வர்மா முதல்முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளது அனைவரது மத்தியிலும் வரவேற்பினை பெற்றுள்ளது. அதேபோன்று தொடர்ச்சியாக ஒருநாள் போட்டிகளில் சொதப்பி வரும் சூரியகுமார் யாதவுக்கு முதன்மை அணியில் வாய்ப்பு கொடுக்கப்பட்டு சிறப்பாக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் பேக்கப் வீரராக எடுக்கப்பட்டுள்ளது விவாதிக்கப்படும் விடயமாகவும் மாறியுள்ளது.

- Advertisement -

இந்நிலையில் இந்த ஆசியக் கோப்பை தொடருக்கான இந்திய அணித்தேர்வு குறித்து பலரும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வரும் வேளையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரான மேத்யூ ஹைடன் இந்த ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணி தேர்வு குறித்து சில கருத்துக்களை வெளிப்படையாக பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : இந்திய அணியில் நல்ல ஒரு பேட்டிங் திறமை இருக்கிறது.

hyden

ஏனெனில் இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ள அனைத்து வீரர்களுமே மிகச்சிறப்பான வீரர்கள். துவக்க வீரராக சுப்மன் கில் இன்னும் அதிக அளவில் போட்டிகளில் விளையாடவில்லை என்றாலும் அவர் எவ்வளவு சிறப்பான வீரர் என்பதை ஏற்கனவே நிரூபித்துள்ளார். அதேபோன்று திலக் வர்மா ஒருநாள் கிரிக்கெட்டில் இன்னும் அறிமுகமாகவில்லை என்றாலும் அவரும் திறமையான வீரர் தான்.

- Advertisement -

ஐபிஎல் கிரிக்கெட் வேறு, சர்வதேச கிரிக்கெட் வேறு என்றாலும் அனைவருமே திறமையானவர்கள் தான். எதிர்வரும் உலக கோப்பைக்கு முன்னதாக நிரந்தரமான வீரர்கள் தேவை. அந்த வகையில் இந்திய அணி தற்போது நல்ல செட்டிலான அணியை எடுத்துள்ளதாக கருதுகிறேன். என்னை பொறுத்தவரை இந்திய அணியின் டாப் ஆர்டர் ஆஸ்திரேலிய அணியை போன்று மிக பலமாக இருக்கிறது.

இந்திய அணியின் செயல்பாடு கடந்த சில மாதங்களாக சிறப்பாகவே உள்ளது. தற்போதைக்கு இந்திய அணியின் மிடில் ஆர்டர் பிரச்சனையை மட்டுமே தீர்க்க வேண்டும். திலக் வர்மா மாதிரியான திறமையான வீரர்களை வைத்து அந்த இடத்தை நிரப்பும்போது சூரியகுமார் யாதவிற்கு அது அழுத்தத்தை கொடுக்கும். திலக் வர்மா நேரடியாக பிளேயிங் லெவனில் இணைக்கும் பட்சத்தில் அது சூரியகுமார் யாதவுக்கு பிரச்சினையாக கூட அமையலாம் என மேத்யூ ஹைடன் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்