- Advertisement 3-
Homeவிளையாட்டுரோஹித்தால் கூட முடியாத விஷயம்.. ஆர்சிபி ரசிகர்களை குஷியாக்கிய மேக்ஸ்வெல்லின் சாதனை..

ரோஹித்தால் கூட முடியாத விஷயம்.. ஆர்சிபி ரசிகர்களை குஷியாக்கிய மேக்ஸ்வெல்லின் சாதனை..

- Advertisement 1-

சமீபகாலமாகவே டி 20 கிரிக்கெட்டில் தொடர்ந்து தனது பேட்டிங் மூலம் அதிரடி விருந்து நடத்தி வருகிறார் ஆஸ்திரேலிய வீரர் கிளென் மேக்ஸ்வெல். அந்த வகையில், தற்போதும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி 20 தொடரில் மிக முக்கியமான சில சாதனைகளை சொந்தமாக்கி உள்ளார் மேக்ஸ்வெல்.

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, அங்கே கிரிக்கெட் தொடர்கள் ஆடி வருகிறது. ஒரு நாள் தொடர் மற்றும் டெஸ்ட் தொடர்களுக்கு பின்னர் தற்போது இரு அணிகளும் டி 20 தொடரில் மோதி வருகின்றனர். இதன் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றிருந்தது. தொடர்ந்து தற்போது நடந்து முடிந்த இரண்டாவது போட்டியில், ஆஸ்திரேலிய அணி மீண்டும் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றி உள்ளது.

முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா, 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளில் இழப்புக்கு 241 ரன்களை எடுத்தது. அந்த அணியின் அதிரடி வீரர் மேக்ஸ்வெல், 55 பந்துகளில் 120 ரன்கள் அடித்து அணியின் ரன்னை ஜெட் வேகத்தில் உயர்த்தவும் செய்திருந்தார். 12 ஃபோர்கள் மற்றும் 8 சிக்ஸர்களுடன் இந்த ரன்னை அவர் சேர்த்திருந்த நிலையில், கடின இலக்கை நோக்கி ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணியும் அசராமல் பேட்டிங் செய்திருந்தது .

ஆனாலும் அவர்களால் 20 ஓவர்கள் முடிவில், 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 207 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால், ஆஸ்திரேலிய அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தொடரையும் சொந்தமாக்கி உள்ளது. இதனிடையே, இந்த போட்டியில் சதமடித்ததன் மூலம், பல முக்கியமான சாதனைகளை டி 20 அரங்கில் நிகழ்த்தி காட்டி உள்ளார் மேக்ஸ்வெல்.

- Advertisement 2-

143 சர்வதேச டி 20 இன்னிங்ஸ்களில் ரோஹித் ஷர்மா 5 சதமடித்துள்ளார். அதனை தனது 94 டி 20 இன்னிங்ஸ்களில் சமன் செய்து காட்டி உள்ளார் மேக்ஸ்வெல். இத்தனை விரைவாக 5 சதங்கள் அடித்த மேக்ஸ்வெல், கடந்த 3 டி 20 போட்டிகளில் இரண்டு சதங்கள் அடித்துள்ளதும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

அது மட்டுமில்லாமல், மேக்ஸ்வெல் சதமடித்த ஐந்து முறையும் அவர் அவுட்டானதே இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. ரோஹித் ஐந்து சதங்கள் அடித்த போதும் அவர் கூட அப்படி ஒரு விஷயத்தை செய்ததில்லை. மேக்ஸ்வெல்லின் இந்த அதிரடி ஃபார்ம், அவர் ஐபிஎல் தொடரில் ஆடி வரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ரசிகர்களை உற்சாகத்திலும் ஆழ்த்தி உள்ளது.

சற்று முன்