Homeகிரிக்கெட்நெறைய பேர் டபுள் செஞ்சுரி அடிச்சிருந்தாலும், இப்படி யாரும் அடிச்சதில்லை - மேக்ஸ்வெல் படைத்த புதிய...

நெறைய பேர் டபுள் செஞ்சுரி அடிச்சிருந்தாலும், இப்படி யாரும் அடிச்சதில்லை – மேக்ஸ்வெல் படைத்த புதிய உலக சாதனை

-Advertisement-

மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற நடப்பு 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 39-ஆவது லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தினர். இந்த போட்டியில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆப்கானிஸ்தான் அணியானது முதலில் பேட்டிங் செய்து 291 ரன்கள் என்கிற நல்ல ரன் குவிப்பை வழங்கியது. பின்னர் 292 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற சவாலான இலக்கு ஆஸ்திரேலியா அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது.

பின்னர் தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலியா அணி ஆப்கானிஸ்தான் அணியை எதிர்த்து மிக சிறப்பான துவக்கத்தை பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலிய அணி துவக்கத்திலேயே பெரிய சரிவை சந்தித்தது. குறிப்பாக ஒரு கட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 91 ரன்களுக்கு ஏழு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

-Advertisement-

பின்னர் கைவசம் உள்ள மூன்று விக்கெட்டுகளுக்கு 201 ரன்கள் தேவை என்கிற நிலையில் ஆஸ்திரேலிய அணி இந்த சரிவிலிருந்து எவ்வாறு மீளப்போகிறது என்று எதிர்பார்த்த வேளையில் அந்த அணியின் அதிரடி ஆட்டக்காரர்கள் மேக்ஸ்வெல், கேப்டன் கம்மின்ஸ் உடன் பார்ட்னர்ஷிப் அமைத்து மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி மேலும் விக்கெட்டுகளை விடாமல் அற்புதாமாக அணியை முன்னோக்கி கொண்டு சென்றார். அவரது இந்த சிறப்பான ஆட்டம் காரணமாக ஆஸ்திரேலிய அணி இறுதியில் 46.5 ஓவர்களில் 293 ரன்களை குவித்து மூன்று விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் ஒருபுறம் கம்மின்ஸ் 68 பந்துகளை சந்தித்து வெறும் 12 ரன்கள் மட்டுமே எடுத்து மேக்ஸ்வெல்லுக்கு கம்பெனி கொடுக்க மறுபுறம் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய மேக்ஸ்வெல் 128 பந்துகளை சந்தித்து 21 பவுண்டரி மற்றும் 10 சிக்ஸர்கள் என 201 ரன்கள் குவித்து ஆஸ்திரேலிய அணியை பிரமாண்டமான வரலாற்று வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

-Advertisement-

தனது காலில் ஏற்பட்ட தசை பிடிப்பையும் பொருட்படுத்தாமல் மேக்ஸ்வெல் விளையாடிய விதம் அனைவரது மத்தியிலும் பாராட்டுக்களை பெற்றுள்ள வேளையில் தற்போது ஒருநாள் கிரிக்கெட்டில் அவர் முதல் நபராக மாபெரும் சாதனை ஒன்றினை நிகழ்த்தியுள்ள தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இதுவரை ஒருநாள் கிரிக்கெட்டில் நிறைய வீரர்கள் இரட்டை சதம் அடித்திருந்தாலும் சேசிங்கில் இரட்டை சதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை மேக்ஸ்வெல் படைத்துள்ளார்.

அதேபோன்று ஒருநாள் போட்டிகளில் துவக்க வீரராக இல்லாமல் இரட்டை சதம் அடித்த வீரர் என்ற சாதனையையும் மேக்ஸ்வெல் நிகழ்த்தியுள்ளார். அது தவிர்த்து ஆஸ்திரேலியா வீரர்களில் முதல் நபராக அவர் இரட்டை சதத்தை பதிவு செய்துள்ளார். இப்படி ஒரே போட்டியில் மேக்ஸ்வெல் ஏகப்பட்ட சாதனைகளை நிகழ்த்தி அசத்தியுள்ளார். அவரது இந்த இன்னிங்ஸ் நிச்சயம் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் நம்ப முடியாத ஒரு மிகச் சிறப்பான இன்னிங்ஸ் என்று பலரும் அவரது இந்த ஆட்டத்தை பாராட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

-Advertisement-

சற்று முன்